பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவது ஏன்? டாஸ்மாக் பணியாளர்கள் முதல்வருக்கு கடிதம்
19 வைகாசி 2026 செவ்வாய் 09:16 | பார்வைகள் : 187
மது கடைகளின் நிர்வாக செலவுகளை பணியாளர்கள் மீது சுமத்துவதால், பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக, முதல்வர் விஜய்க்கு, பணியாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்கிறது. அவற்றில் பணிபுரியும் பணியாளர்கள், மது பாட்டிலுக்கு, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட கூடுதலாக, 10 ரூபாய், 20 ரூபாய் என வசூலிக்கின்றனர்.
காரணம் இதனால், மது பிரியர்கள் பாதிக்கப்படுவதை அடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, கூடுதலாக பணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது, கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கூடுதலாக பணம் வசூலிப்பதற்கான காரணம் குறித்து, முதல்வர் விஜய், உள்துறை செயலர் ஆகியோருக்கு, ஏ.ஐ.டி.யு.சி., டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, பொதுச்செயலர் தனசேகரன் அனுப்பியுள்ள கடிதம்:
இதில், இரு பிரச்னைகள் உள்ளன. ஒன்று காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில், ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலித்து, பின், அந்த பாட்டில் திரும்ப தரும்போது, 10 ரூபாயை திருப்பி தரப்படுகிறது.
மற்றொன்று, மது கடைகளின் நிர்வாக செலவுகளை டாஸ்மாக் நிர்வாகம் முறையாக ஏற்காமல், அதை பணியாளர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு காரணமாக ஏற்பட்டுள்ள குறைபாடு. இது ஊழல், முறைகேடுகளுக்கு வழி வகுத்துள்ளது.
இது முற்றிலும் தடுக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட வேண்டும். கேரள அரசு நடத்தும் மது கடைகளில் கடைப்பிடிக்கப்படும் நிர்வாக விதிமுறைகளை தமிழக அரசு பின்பற்றி, டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும்.
மது கடைகள் மதியம், 12:00 மணிக்கு திறக்கப் பட்டு, இரவு 10:00 மணிக்கு மூடப்பட வேண்டும்.
மது விற்பனையில் கணினிமயம் நடைமுறையில் இருப்பதால், விற்பனை முடிந்த பின், 30 நிமிடங்கள் முதல், 90 நிமிடங்கள் வரை கணக்குகளை சரிபார்த்து, இறுதி செய்ய அவகாசம் தேவை.
இடையூறு இந்நிலையில், இரவு, 10:00 மணிக்கு மேல் ஒரு வினாடியும் பணியாளர்கள் கடைகளுக்குள் இருக்கக் கூடாது என டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர்கள் உத்தரவிட்டு, தீவிரமாக அமலாக்க தொடங்கியுள்ளனர்; இது, பணியாளர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
அரசின் கொள்கை முடிவு, நிர்வாக உத்தரவுகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து, பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan