TotalEnergies: பெந்தெகொஸ்து வார இறுதியை முன்னிட்டு எரிபொருள் விலைக்கட்டுப்பாடு!!
18 வைகாசி 2026 திங்கள் 21:55 | பார்வைகள் : 132
TotalEnergies பெந்தெகொஸ்து (Pentecôte) வார இறுதியை முன்னிட்டு எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்தும் தனது திட்டத்தை தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 1.99 யூரோவும், டீசல் லிட்டருக்கு 2.09 யூரோவும் விற்கப்படும்.
TotalEnergies நிறுவனம் மே 18 திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மே 23 சனிக்கிழமை முதல் மே 25 திங்கட்கிழமை வரை நடைபெறும் பெந்தெகொஸ்து வார இறுதிக்காக எரிபொருள் விலை கட்டுப்பாட்டு திட்டத்தை புதுப்பிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாட்களில், பிரான்ஸ் முழுவதும் உள்ள அதன் அனைத்து நிலையங்களிலும் பெட்ரோல் லிட்டருக்கு 1.99 யூரோவும், டீசல் லிட்டருக்கு 2.09 யூரோவும் விற்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த “சிறப்பு நடவடிக்கை” திட்டம், மே 1 மற்றும் மே 8 விடுமுறை போல வார இறுதிகளிலும், மேலும் Ascension வார இறுதியிலும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan