நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி
18 வைகாசி 2026 திங்கள் 17:06 | பார்வைகள் : 243
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
இதனையொட்டி, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்:
"எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஆகும். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளோம்," என்று தெரிவித்தார்.
நந்திக்கடல் அஞ்சலியைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan