Paristamil Navigation Paristamil advert login

ஸ்ரீ லீலா கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா?

ஸ்ரீ லீலா கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா?

18 வைகாசி 2026 திங்கள் 16:13 | பார்வைகள் : 108


தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ரீ லீலா இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் அடிக்கடி மும்பை, ஹைதராபாத்தில் டேட்டிங் சென்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று ஸ்ரீலீலா தரப்பு அந்த செய்திகளை மறுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகை ஸ்ரீலீலா நிஜ வாழ்க்கையில் இதுவரை திலக் வர்மாவை ஒரு முறை கூட நேரில் சந்தித்ததே இல்லை. அப்படி இருக்கும்போது அவர்களை இணைத்து காதல் வதந்தி பரப்புவது வேடிக்கையாக உள்ளது. அவர்கள் காதலிப்பதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. ஆதாரமற்றவை. அதோடு ரசிகர்கள் இதுபோன்று உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.