சிக்கன் பொடிமாஸ்
18 வைகாசி 2026 திங்கள் 16:09 | பார்வைகள் : 115
சிக்கன் வைத்து சிக்கன் கிரேவி, சிக்கன் 65 தான் பெரும்பாலும் வீட்டில் சமைப்போம். சிக்கன் முட்டை சேர்த்து ஒரு சூப்பரான சுவையில் சமைக்கப்படும் ரெசிபி தான் சிக்கன் பொடி மாஸ். இந்த மாதிரி சமைச்சு பாருங்கள் கொஞ்சம் கூட மிச்சம் இல்லாம எல்லாரும் சாப்பிட்டு காலி பண்ணிருவாங்க.
தேவையான பொருள்கள் : சிக்கன், முட்டை, சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, எண்ணெய், சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுதூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு,
செய்முறை : எழும்பு இல்லாத சிக்கனாக எடுத்து நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் தனியாக எடுத்து மிக்ஸி ஜாரில் வைத்து தூளாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து சீரகம், 150 கிராம் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொண்டு, ஒரு தக்காளி எடுத்து துண்டு துண்டாக நறுக்கி நன்றாக வதக்கி கொள்ளவும்.
நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கி கொண்டு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும். பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பெரட்டி கொண்டு வேகவைக்கவும்.
வெந்த பின் நான்கு முட்டைகளை உடைத்து அதில் ஊற்றி கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து மூடி வைத்து கொஞ்சம் வெந்ததும் முட்டை சிக்கன் முழுவதும் படும்படி நன்றாக பெரட்டி விட்டு இரண்டு பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் டேஸ்ட்டான சிக்கன் பொடி மாஸ் சூப்பரா ரெடியாகிரும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan