சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
18 வைகாசி 2026 திங்கள் 16:04 | பார்வைகள் : 119
தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட கோரிக்கை மனு வழங்கியதாக தகவல். அதேபோல் முதல்வரை சந்தித்த நடிகர் கமல்ஹாசனும் கோரிக்கை மனு அளித்தார்.
இந்நிலையில் இன்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த தலைவர் தமிழ்குமரன், செயலாளர்கள் கதிரேசரன், பொருளாளர் சுபாஷ்சந்திரபோஸ், துணைத்தலைவர்கள் கமலக்கண்ணன், ஆர்.கே.சுரேஷ், இணைச்செயலாளர் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் இன்று முதல்வரை சந்தித்து வாழ்த்து சொல்லி, வழக்கம்போல் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இன்னும் சில சினிமா சங்கங்களும் முதல்வரை சந்திக்க கோரிக்கை மனுவுடன் தயாராக இருக்கிறார்கள். பதவியேற்ற சில நாட்களில் சினிமா சங்கங்கள் சந்தித்து பேசினாலும், சினிமாவுக்கான பிரச்னைகள் அதிகம். அவர்கள் அரசிடம் எதிர்பார்க்கிற விஷயங்களும் அதிகம். அதை அவர் நிறைவேற்றி தருவாரா? அதற்கு பட்ஜெட்டில் இடம் இருக்குமா? ஒருவேளை சினிமாகாரர்களுக்கு சலுகை அறிவித்தால் மற்ற துறையினர் விமர்சனம் செய்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
கொல்கட்டாவில் சுந்தர்.சி இயக்கும் 'புருஷன்' படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் சங்க செயலாளர் விஷால் இன்னமும் முதல்வரை நேரில் சந்திக்கவில்லை. தமிழக அமைச்சர் ராஜ்மோகன் நியமனம் குறித்து அவர் விடுத்த கோரிக்கை சர்ச்சை ஆன நிலையில், அவர் முதல்வரை சந்திப்பாரா? அவருக்கு அனுமதி கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan