தென் கொரியா உடனான எல்லை தொடர்பில் கிம் ஜோங் உன் அதிரடி
18 வைகாசி 2026 திங்கள் 14:56 | பார்வைகள் : 118
தென் கொரியாவுடனான எல்லையில் உள்ள முன்னணிப் படைப்பிரிவுகளையும், பிற முக்கியப் படைப்பிரிவுகளையும் வலுப்படுத்துவதே, போரை இன்னும் முழுமையாகத் தடுப்பதற்கு முக்கியம் என்று வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
எல்லையை அசைக்க முடியாத கோட்டையாக மாற்றுவதற்காக அங்கு இராணுவ பலத்தை அதிகரிப்பது குறித்த கிம்மின் கருத்துக்கள், இராணுவம் முழுவதிலும் உள்ள படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேடுகளின் தளபதிகள் கலந்துகொண்ட ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
நவீனப் போரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பயிற்சி முறையைச் சீரமைக்கவும், செய்முறைப் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், வட கொரிய இராணுவத்தின் செயல்பாட்டுக் கருத்துருக்களை மறுவரையறை செய்யவும் அவர் அழைப்பு விடுத்தார்.
மட்டுமின்றி, பரம எதிரிக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை கிம் வலியுறுத்தியுள்ளார்.
வட கொரியா பொதுவாக தென் கொரியாவை குறிப்பிட பரம எதிரி என்ற சொல்லையேப் பயன்படுத்தி வருகிறது.
1950–53 காலகட்டத்தில் நடைபெற்ற மோதல், அமைதி ஒப்பந்தத்திற்குப் பதிலாக ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் முடிவடைந்ததால், இரு கொரிய நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக இன்றும் போரில்தான் உள்ளன.
இதனிடையே, கிம் ஆட்சிக்கு வந்த பிறகு, படைப்பிரிவு மற்றும் படைத் தளபதிகளுடன் அவர் நடத்திய முதல் சந்திப்பு இதுவாகத் தெரிகிறது எனத் தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது.
மேலும், தென் கொரியா இராணுவப் பதட்டங்களைத் தொடர்ந்து சமாளித்து, நம்பிக்கையை வளர்க்க முயலும் என்றும் அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி எல்லைப் பகுதிகளுக்கு அருகில், வட கொரியப் படைகள் மார்ச் மாதம் முதல் சுவர்களைக் கட்டுவது உள்ளிட்ட பாதுகாப்பு பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் திங்களன்று தெரிவித்தனர்.
நவீனப் போர்முறை மற்றும் அனைத்துத் துறைகளிலும் செயல்பாடுகளை மறுவரையறை செய்வது குறித்த கிம்மின் கருத்துகள், உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு மோதல்களில் இருந்து வட கொரியா கற்றுக்கொண்ட பாடங்களைப் பிரதிபலித்திருக்கலாம்.
ட்ரோன்களின் பயன்பாடு, துல்லியத் தாக்குதல்கள் மற்றும் மின்னணுப் போர்முறை ஆகியவை இதில் அடங்கும் என மூத்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan