Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் விஜய்க்கு 6 மாதம் அவகாசம் தரணும்; சொல்கிறார் கமல்

முதல்வர் விஜய்க்கு 6 மாதம் அவகாசம் தரணும்; சொல்கிறார் கமல்

18 வைகாசி 2026 திங்கள் 09:42 | பார்வைகள் : 120


புதியவர்களை வந்து நாம் கம்மியாகவும் எடை போட வேண்டாம். ரொம்பவும் எதிர்பார்க்க கூடாது. முதல்வர் விஜய்க்கு 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என நடிகர் கமல் தெரிவித்து உள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல் கூறியதாவது:

இரண்டு நாட்களில் சொல்ல கூடியது ஜோசியமாக தான் இருக்க முடியும். 6 நாட்களில் சொல்ல முடிவது அப்படி தான் இருக்க முடியும். 15 நாட்களிலும் அப்படி தான் இருக்க முடியும். முதல்வர் விஜய்க்கு ஒரு 6 மாதம் டைம் கொடுக்க வேண்டாமா? புதியவர்கள் நிறைய பேர் வந்து இருக்கிறார்கள். அதனால் புதியவர்கள் என்பது அரசியலுக்கு புதிது கிடையாது. சுதந்திர இந்தியா கிடைத்த போது எல்லோரும் புதிய அமைச்சர்கள் தான்.

அதனால் புதியவர்களை வந்து நாம் கம்மியாகவும் எடை போட வேண்டாம். ரொம்பவும் எதிர்பார்க்க கூடாது. என்ன நடக்கிறது என்பதை பார்த்து கொண்டு, நீங்கள் தானே ஓட்டு போட்டீர்கள்; அது நல்ல படியாக நடக்கிறதா என்பதை நீங்கள் தான் கவனிக்க வேண்டும். நாங்களும் கண்காணிக்கிறோம். என்னை பொறுத்தவரையில், தமிழகத்தில் இருந்து தமிழ் பேசுகிறவர்கள் ஒருவர் கட்சி ஆரம்பித்தால், அது பெயர் திராவிட கட்சி தான். இவவாறு கமல் கூறினார்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''தமிழகத்தை கட்டாயப்படுத்த முடியுமா? பண்ணி பார்த்துவிட முடியுமா?'' என கமல் பதில் அளித்தார்.

போட்டி போடுவோம்!

விஜய் வெற்றி பெற்றது ஆச்சரியம் கலந்த சந்தோஷம், ஒரு வேளை கமல் முதல்வராக வந்து இருந்தால் கூட பொறாமைபட்டு இருப்பேன் என்று சிரிப்பலையோடு சொல்லி இருக்கிறார் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' சிரிப்போடு தான் சொன்னார். நாங்கள் இரண்டு பேரும் ஒருத்தர் ஒருவர் பொறாமைப்பட்டது கிடையாது. போட்டி போடுவோம். கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படிதான் இருப்போம்'' என நடிகர் கமல் பதில் அளித்தார்.

அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஐ நேரில் சந்திக்காதது குறித்த கேள்விக்கு, ''உங்களை மாதிரி தான் பார்க்கிறேன், வேடிக்கை பார்க்கிறேன்'' என கமல் பதில் அளித்தார்.