ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனா விஜயம்
17 வைகாசி 2026 ஞாயிறு 09:30 | பார்வைகள் : 150
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீனப் பயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் மாஸ்கோ–பெய்ஜிங் இடையிலான மூலோபாய கூட்டாண்மை மற்றும் பொருளாதார, அரசியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் போரில் சீனா அதிகாரப்பூர்வமாக நடுநிலை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்தாலும், போருக்கு முன்னர் புடின் மற்றும் ஷி ஜின்பிங் அறிவித்த “எல்லையற்ற நட்பு” உலக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.
ரஷ்யாவின் ட்ரோன் உற்பத்திக்கு சீன நிறுவனங்கள் மறைமுக ஆதரவு வழங்கியதாக மேற்கத்திய நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
வொஷிங்டன்–பெய்ஜிங் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், மேற்கத்திய தடைகளுக்கு பின்னர் ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் ஆழமடைந்து வருவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan