Paristamil Navigation Paristamil advert login

கடந்த கால சாதனைகளை அழிக்கும் மேற்காசிய போர்: பிரதமர் மோடி எச்சரிக்கை

கடந்த கால சாதனைகளை அழிக்கும் மேற்காசிய போர்: பிரதமர் மோடி எச்சரிக்கை

17 வைகாசி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 116


மேற்காசியாவில் நடக்கும் போர் மற்றும் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு ஆகியவை கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட வளர்ச்சியை பின்னோக்கி தள்ளுவதுடன், மக்களை வறுமையில் தள்ளிவிடும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நெதர்லாந்து சென்றுள்ள  பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் பேசியதாவது:

முதலில் கோவிட் வந்தது. பிறகு போர்கள் மூண்டன. தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தசாப்தம் உலகிற்கு நெருக்கடிகளின் தசாப்தமாக மாறி வருகிறது.

இந்நிலைமை விரைவில் மாற வேண்டும். இல்லை என்றால், கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட சாதனைகள் அனைத்தும் துடைத்து எறியப்படும்உலக மக்கள் தொகையில் ஒரு பெரும் பகுதி மீண்டும் வறுமை எனும் வலையில் சிக்கக்கூடும்.

உலகில் இன்று நிலவும் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இன்று மீள்திறன் கொண்ட விநியோக சங்கிலியை பற்றி சிந்திக்கிறது. நம்பகமான மற்றும் வெளிப்படையான விநியோக சங்கிலியை உருவாக்குவதில் இந்தியாவும், நெதர்லாந்தும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இன்று நீங்கள் காட்டிய அன்பும், உற்சாகமும் நான் நெதர்லாந்தில் இருக்கிறேன் என்பதை மறக்க செய்துள்ளது.  இந்தியாவில் உள்ள ஏதோ ஓரு பகுதியில் நடக்கும் கொண்டாட்டத்தில் பங்கேற்றது போன்ற உணர்வ ஏற்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.