Paristamil Navigation Paristamil advert login

ரவி மோகன் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்த ஆர்த்தி!

 ரவி மோகன் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்த ஆர்த்தி!

16 வைகாசி 2026 சனி 16:36 | பார்வைகள் : 124


குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு நடிகர் ரவி மோகன் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என அவரது மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து முடிக்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் மற்றும்  அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ரவி மோகன் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உட்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி  புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இதையடுத்து,  இடைக்கால ஜீவனாம்ச மனுவை  விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி ஆர்த்தி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ஆர்த்தி ரவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர்  ரவி மோகன் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக வழங்கி வந்த தொகையை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்த்தி தாக்கல் மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  ஏற்கனவே ரவி மோகனின் தோழி கெனிஷா, ஆர்த்தி குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் மேற்கொண்டு எந்த கருத்துக்களையும் வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.