சென்னையை விட்டு வெளியேறினார் கெனிஷா !
16 வைகாசி 2026 சனி 16:20 | பார்வைகள் : 125
நடிகர் ரவி மோகன் அவரது காதல் மனைவி ஆர்த்தி ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்தனர். அதன்பின் ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் 'லிவிங் டு கெதர்' ஆக வாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்டது. சில நிகழ்ச்சிகளுக்கு தன்னுடன் கெனிஷாவையும் அழைத்து வந்தார் ரவி மோகன். அதனால், அவர்களுக்கு இடையிலான உறவு உண்மைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆர்த்தி பற்றி கெனிஷா எதுவும் பேசக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து தான் யார், தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள் என்னென்ன என்பதை வீடியோ வெளியிட்டு இருந்தார் கெனிஷா.
இந்நிலையில் நேற்றிரவு திடீரென இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு நீண்ட பதிவு ஒன்றைப் போட்டுள்ளார் கெனிஷா. அதில்,
“அன்புள்ள அனைவருக்கும்,
நான் சொல்ல வேண்டியதை விட அதிகமாகவும், சொல்ல முடியாததை விட அதிகமாகவும் பேசிவிட்டேன். அவற்றில் பெரும்பாலானவை தேவையற்றவையே. இந்தக் கதையில் நான் அன்புடன் நுழைந்தேன். இப்போது அமைதியுடன் வெளியேறுகிறேன்.
சில இடங்கள் இரைச்சல், அகங்காரம், தீர்ப்பு, புனையப்பட்ட கதைகளால் முழுவதுமாக நிரம்பி, நன்மைக்கு இனி சுவாசிக்கக் கூட இடமில்லாமல் ஆகிவிடுகின்றன. அப்படி நடக்கும்போது, அன்பு கூட வரவேற்கப்படாததாக உணரத் தொடங்குகிறது.
உலகம் ஏற்கனவே ஒரு கதையை முடிவு செய்துவிட்ட ஒரு மனிதனைப் பாதுகாக்கும் முயற்சியில் என்னுடைய சில பகுதிகளை நான் கொடுத்திருந்தேன். ஆனால் இப்போது ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டேன், காட்சிக்கு அடிமையான உலகில், கனிவு குழப்பத்திற்கு எதிராக ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
பொது மக்களுக்கும், சினிமா துறைக்கும், கருத்துரைப்பவர்களுக்கும், அவரை விரும்புபவர்களுக்கும், வெறுப்பவர்களுக்கும், பாதுகாக்க முயல்பவர்களுக்கும், கேலி செய்பவர்களுக்கும், அவரது வாழ்க்கையின் மீது உரிமை கொண்டாடுபவர்களுக்கும், அவர் இப்போது முழுமையாக உங்களுடையவர். இனி எந்த விளக்கமும் இல்லை. இனி எந்த பாதுகாப்பும் இல்லை.
எனக்கே சொந்தமில்லாத போர்களை இனி போராடப் போவதில்லை. நல்ல மனிதர்களுக்கு ஒரு வாய்ப்பு தேவை என்று நினைத்து ஆதரவு கொடுப்பதே சிறந்தது என்று நான் முட்டாள்தனமாக நம்பினேன். ஆனால் இப்போது புரிகிறது, இந்த இடம் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், கையாளுபவர்கள், உயிரைப் பிழிபவர்கள் மட்டுமே இருக்கும் இடம். ஆகையால், அமைதியுடனும், அன்புடனும், முழுமையான பிரிவுடனும் அவரை விடுகிறேன். என் மீது சுமத்தப்பட்டிருந்த எல்லா பொறுப்புகளையும் விடுகிறேன்.
உண்மையான அன்பு, விசுவாசம், மென்மை ஆகியவை என்ன செய்ய முடியும் என்பதை உலகம் என்னை வெளிப்படுத்த அனுமதித்திருந்தால் என்று மட்டுமே ஆசைப்படுகிறேன். ஒருவேளை இந்தத் தலைமுறை மென்மையை இனி நம்புவதில்லை. அழிப்பது பக்தியை விட எளிதாக ஜீரணிக்கக் கூடியதாக இருக்கிறது. மக்கள் எப்போதும் உணர்ச்சியால் உருவான கதைகளையே தியாகத்தால் உருவான உண்மைகளை விட தேர்ந்தெடுக்கிறார்கள். பரவாயில்லை, போகட்டும். நீங்கள் விரும்பியதைப் பெற்றுவிட்டீர்கள்.
ஆகவே இன்று நான் எதிர்ப்பதை நிறுத்துகிறேன். தவறாகப் புரிந்துகொள்ள மட்டுமே உறுதியாக இருக்கும் அறைகளில் நன்மையை நிரூபிக்க முயல்வதை நிறுத்துகிறேன். நான் சென்னையை விட்டு வெளியேறிவிட்டேன். என் இசையை, என் சிகிச்சையை, இதுவரை என் வாழ்க்கையைப் பற்றியிருந்த அனைத்தையும் விட்டுவிட்டேன்.
கடவுள் படைத்ததை மனிதன் உடைக்க முடியும் என்பது உண்மைதான் போலும். ஆன்லைன் புல்லிங், சூழ்ச்சி, சூனியம் இவற்றால்தான் நான் வெளியேறுகிறேன். அதனுடன் இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூக ஊடக கணக்குகளிலிருந்தும் லாக் அவுட் ஆகிறேன். கடவுள் வெற்றி பெறும் வரை.
என் நண்பர்கள், குடும்பம், நலம் விரும்பிகள் அனைவரும் எனக்குத் தேவையான தனியுரிமையைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றிலிருந்து : பெண்ணியம், நீங்கள் வென்றுவிட்டீர்கள். மகிழ்ச்சி, நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.
அன்பும் ஒளியும்.
கெனீஷா பிரான்சிஸ்
என்று பதிவிட்டுள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்புதான் ஒரு மேடை இசை நிகழ்ச்சியில் ரவிமோகனை கட்டியணைத்தபடி இருக்கும் ஒரு சிறிய வீடியோவைப் பதிவிட்டிருந்தார் கெனிஷா. அதற்குள் இருவருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கெனிஷாவின் பதிவு குறித்து ரவிமோகன் இதுவரை எதையும் பதிவிடவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan