செனெகலில் ஒருவரின் பாலின விருப்பத்திற்காக பிரெஞ்சு குடிமகன் கைது!
16 வைகாசி 2026 சனி 11:06 | பார்வைகள் : 126
செனெகலில் ஓரின பாலின விருப்பம் தொடர்பான குற்றச்சாட்டில் ஒரு பிரெஞ்சுக் குடிமகன், 14 பிப்ரவரி 2026 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை 15 மே வெள்ளிக்கிழமை ஒரு தூதரக வட்டாரம் உறுதிப்படுத்தியது.
பிரான்ஸ் :
அந்த நபரின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளது
டக்கார் பிரான்ஸ் தூதரகம் நிலைமையை “அதிக கவனத்துடன்” கண்காணிக்கிறது
பிரான்ஸ் தூதரகம்
தூதரக பாதுகாப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக, அவரை நான்கு முறை சந்தித்துள்ளது
குற்றச்சாட்டுகள்
இயற்கைக்கு முரணான செயல்கள்
குற்றச்செயல் குழுவில் இணைப்பு
பணம் சுத்திகரிப்பு
எய்ட்ஸ(VIH) பரப்ப முயற்சி
இந்த கைது, செனெகலில் சமீபத்தில் நடந்த, பெரிய அளவிலான கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
செனெகலில் சமீபத்தில் சட்டம் கடுமையாக்கப்பட்டது
31 மார்ச் 2026 அன்று செனெகல் அரசு, ஓரினபாலின விருப்பத்தைக் குற்றமாகக் கருதும் சட்டத்தை, இரட்டிப்பு தண்டனைகளுடன் கடுமையாக்கியது.
இப்போது :
ஒரே பாலினத்தவருக்கிடையிலான செயல்கள்
→ 5 முதல் 10 ஆண்டுகள் சிறை
அபராதம் : 3,000 முதல் 15,000 யூரோ
இந்த சட்டத்தை முன்னெடுத்தவர் :
செனெகல் பிரதமர் Ousmane Sonko
அவர்,
“ஒரே பாலினத்தவருக்கிடையிலான எந்தச் செயலாக இருந்தாலும், அது இயற்கைக்கு முரணான செயல்.
இதை சட்டத்தில் தெளிவாக வரையறுக்க வேண்டும்.”
மார்ச் இறுதியில்
→ செனெகல் ஊடகங்களில் தினமும் பல புதிய கைதுகள் பதிவாகியிருந்தன.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் கண்டனம்
ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் Volker Türk
இந்த சட்டத்தை :
“மிகவும் கவலைக்குரியது”
“மனித உரிமைகளை மீறுகிறது”
என்று கடுமையாக விமர்சித்தார்.
பிரான்சின் நிலைப்பாடு : மனித உரிமைகள் மற்றும் LGBT+ பாதுகாப்பு
“பிரான்ஸ், மனித உரிமைகளின், உலகளாவிய மற்றும் பிரிக்க முடியாத தன்மையை மதிக்கிறது.”
பிரான்ஸ் மேலும் வலியுறுத்தியது :
உலகளாவிய அளவில், பாலின விருப்ப குற்றவியல் நீக்கம்
LGBT+ நபர்களின் உரிமைகள் பாதுகாப்பு
பாலின விருப்பம் மற்றும் பாலின அடையாளத்தின் அடிப்படையிலான, பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம்
மேலும்,
“உலகின் எங்கும் உரிமைகள் மீறப்படும் போது, பாகுபாட்டுக்கு உள்ளாகும் அனைவருக்கும், பிரான்ஸ் முழு ஆதரவு வழங்குகிறது.
குறிப்பாக இந்தச் சட்டத்தால் ஆபத்தில் உள்ளவர்களுக்கு.”
எனத் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan