அரசின் ஆதரவு போதவில்லை - குடும்பஙகள் கவலையில்!
16 வைகாசி 2026 சனி 09:54 | பார்வைகள் : 144
பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சேமிப்பு, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செலவுகள், வேலை‑குடும்ப நேரத்தை சமநிலைப்படுத்துதல்…பிரான்ஸ் குடும்பங்களில் ஒருவர் இருவர் , அரசு வழங்கும் உதவிகள் போதுமானவை அல்ல என்று கருதுகின்றனர்.
இந்த கவலைக்குரிய நிலையை OpinionWay – Unaf ஆய்வு செய்து15 மே வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
குடும்பங்களில் “அரசின் உதவி போதவில்லை”
ஆய்வு கூறுவது :
50% குடும்பங்கள் → அரசின் ஆதரவு போதவில்லை
குறிப்பாக 0 முதல் 5 வயது குழந்தைகள் உள்ள பெற்றோரில்
→ 55% அதிருப்தி
இது 2024‑ஐ விட 10 புள்ளிகள் அதிகம்.
அரசின் ஆதரவாக கருதப்படும் அம்சங்கள் :
குடும்பப் வழங்கல்கள் (prestations familiales)
வரிவிலக்குகள் / வரிக் குறைப்புகள்
குழந்தை பராமரிப்பு உதவிகள்
ஆனால் பெரும்பாலான குடும்பங்கள் :
“இவை எங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்கு போதவில்லை”
என்று கருதுகின்றனர்.
நிதி நிலை : பெற்றோரின் கவலை அதிகரிப்பு
53% → பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சேமிப்பு செய்ய முடியவில்லை
(2024‑ல் இது 43% மட்டுமே)
33% → தற்போதைய நிதிநிலை
→ பிள்ளைகளுக்கு “மகிழ்ச்சி அளிக்கும்” செலவுகளையும் செய்ய முடியவில்லை
13% → பிள்ளைகளின் அத்தியாவசிய தேவைகளையும்
→ பூர்த்தி செய்ய முடியாத நிலை
இது குடும்பங்களின் கொள்வனவுத் திறன், தொடர்ந்து மோசமடைந்து வருவதை காட்டுகிறது.
குடும்பங்கள் சந்திக்கும் சிரமங்கள் : பணம் முதல் பிரச்சினை அல்ல
ஆச்சரியமாக, நிதி சிரமங்கள் முதல் இடத்தில் இல்லை.
பெற்றோர்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் :
திரை(செல்பேசி, தப்லெட்., தொலைக்காட்சி) பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் — 49%
மற்ற குழந்தைகளுடன் உறவுகள் / சமூகப் பிரச்சினைகள் — 34%
அதிகாரம் / ஒழுக்கம் தொடர்பான சிக்கல்கள் — 30%
பண நெருக்கடி — 29%
இது குடும்ப வாழ்க்கையில்
டிஜிட்டல் மேலாண்மை மற்றும் கல்வி சவால்கள், மிகப் பெரிய பங்கு வகிப்பதை காட்டுகிறது.
வேலை – குடும்ப நேர சமநிலை : பெரும்பாலான பெற்றோருக்கு சிக்கல்
வேலை செய்கிற பெற்றோரில் :
74% → கடந்த 12 மாதங்களில் குறைந்தது ஒருமுறை
குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை
காரணம் :
→ வேலை நேரம் அதிகம்
→ குடும்பத்திற்கான நேரம் குறைவு
இது பிரான்சில்
வேலை‑வாழ்க்கை சமநிலை இன்னும் பெரிய சவாலாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan