வார இறுதியில் மெட்ரோ, Transilien, RER சேவைகளில் பாதிப்பு: மாற்று பேருந்துகள் இயக்கம்!!
15 வைகாசி 2026 வெள்ளி 22:10 | பார்வைகள் : 171
Île-de-France பகுதியில் மே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளால் பல மெட்ரோ, RER மற்றும் Transilien தொடருந்து சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் முன்கூட்டியே தங்களது பயண திட்டங்களை சரிபார்க்குமாறு போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
3bis இலக்க மெட்ரோ முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், Gambetta மற்றும் Porte des Lilas இடையிலான சேவை மே 21 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய MF19 தொடருந்து அறிமுகப்படுத்தும் பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12ம் இலக்க மெட்ரோ ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு சேவையை நிறுத்தவுள்ளது. அதேவேளை 13ம் இலக்க மெட்ரோ ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்குப் பிறகே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் மாற்று பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.
RER C மற்றும் RER D சேவைகளிலும் கணிசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. Massy-Palaiseau, Juvisy, Etampes மற்றும் Dourdan பகுதிகளுக்கான சில RER C சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. RER D சேவையில் வழக்கமான சேவையில் பாதியளவு மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Maisons-Alfort மற்றும் Vert-de-Maisons நிலையங்களில் சில நேரங்களுக்கு தொடருந்துகள் நின்று செல்லாது.
இதனுடன் RER E, Transilien J, Transilien K மற்றும் Transilien V ஆகிய சேவைகளிலும் பணிகள் காரணமாக தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தொடருந்துகளுக்கு பதிலாக மாற்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக Petit-Jouy Les Loges நிலையம் மே 31 வரை சேவையளிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan