மக்ரோன் தம்பதியரைச் சுற்றி புதிய சர்ச்சை!!
15 வைகாசி 2026 வெள்ளி 17:27 | பார்வைகள் : 242
ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கு அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன் விமானத்தில் அறைந்ததாக வெளியான சம்பவத்திற்கு பின்னால் ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த நடிகை Golshifteh Farahani காரணமா என்ற கேள்வி பிரான்ஸ் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவலை முதல் பெண்மணியின் சுற்றத்தார் முற்றிலும் மறுத்துள்ளனர்.
இந்த புதன்கிழமை வெளியான “Un couple (presque) parfait” என்ற புத்தகத்தில், Florian Tardif என்ற பத்திரிகையாளர், 2025 மே மாதத்தில் நிகழ்ந்த அந்த சம்பவம் பொறாமை காரணமாக ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, ஜனாதிபதி Emmanuel Macron மற்றும் நடிகை Golshifteh Farahani இடையே சில மாதங்கள் “உணர்ச்சி சார்ந்த ஆனால் உடலுறவு இல்லாத” நெருக்கமான தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. மேலும், “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” போன்ற செய்திகளும் பரிமாறப்பட்டதாக அவர் கூறினார். இதுவே தம்பதியருக்குள் பதற்றத்தை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் 2025 மே 25ஆம் தேதி வியட்நாமின் ஹனாய் விமான நிலையத்தில் நடந்தது. அதிபர் விமான கதவின் அருகில் நிற்கும் போது, காட்சி வெளியே இருந்த Brigitte Macron அவரின் கைகள் இமானுவேல் மக்ரோனின் முகத்தைத் தட்டுவது போன்ற காட்சி வீடியோவில் பதிவாகி பரவலாக பேசப்பட்டது.
அந்த நேரத்தில் எலிசே அரண்மனை இதை “தம்பதியருக்கிடையேயான நகைச்சுவை மற்றும் சின்ன சண்டை” என விளக்கியது. ஆனால் புத்தக ஆசிரியர் இது உண்மையான வாக்குவாதம் எனக் கூறுகிறார். ஆனால் Brigitte Macron அவர்களின் சுற்றத்தார் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளனர். “அவர் தனது கணவரின் மொபைல் தொலைபேசியைப் பார்த்ததே இல்லை” என்றும், இந்த மறுப்பை ஆசிரியரிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும் அது புத்தகத்தில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan