Paristamil Navigation Paristamil advert login

வாழை இலை பொரித்த மீன்..!

வாழை இலை பொரித்த மீன்..!

15 வைகாசி 2026 வெள்ளி 15:51 | பார்வைகள் : 132


மீன் வாங்குனா எப்போதுமே பொறியல், வறுவல் செஞ்சு சாப்பிடுவோம், மீன் பொறியல் செய்யும்போது வாழை இலையில் வைத்து பொறித்து எடுத்தால் வாழை இலையின் மனம் மற்றும் சுவை ஒட்டி வரும் போது அதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். வாழை இலை பொறியல் இப்படி ஈசியா சமைச்சு பாருங்கள்.

தேவையான பொருட்கள் : மீன், வாழை இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், எழுமிச்சை பழம், கருவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை : பிடித்த‌ மீனை எடுத்து செதில்களை நீக்கி கொண்டு நடு நடுவே கீறிக்கொள்ள வேண்டும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் எழுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து மீன் முழுவதும் தடவிக் கொள்ளவும்.

மீனில் மசாலா ஊறும் வரை அரைமணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இதன்பின் வாழை இலையின் மேல் வைத்து மீனின் மீது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி வைத்து வாழை இலையினை மடித்து நூல் வைத்து முழுவதும் கட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் பேன் வைத்து பேனில் தண்ணீர் தெளித்து அதன்‌மேல் வாழை இலையினை வைத்து கொண்டு மீன் முழுவதும் வேகும்படி மாற்றி மாற்றி வைத்து வேக வைத்து எடுத்தால் வாழை இலை மீன் பொறியல் வாழை மனம் மனக்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்.