Alienware அறிமுகம் செய்துள்ள முதல் பட்ஜெட் கேமிங் லேப்டாப்
15 வைகாசி 2026 வெள்ளி 13:45 | பார்வைகள் : 144
பிரபலமான கேமிங் சாதன உற்பத்தியாளரான Alienware, தனது முதல் பட்ஜெட் கேமிங் லேப்டாப் Alienware 15-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிக விலை கொண்ட மாடல்களுக்குப் பெயர் பெற்ற Alienware, இப்போது குறைந்த விலையில் கேமிங் அனுபவத்தை வழங்கும் முயற்சியில் உள்ளது.
Alienware 15, AMD Ryzen 7 260 அல்லது Ryzen 5 220 CPU-களுடன், Nvidia GeForce RTX 4050 GPU-வுடன் வருகிறது. விருப்பமாக RTX 5060 வரை மேம்படுத்தலாம். Intel Core மாடலும் கிடைக்கிறது.
இந்த லேப்டாப், 512GB அல்லது 1TB NVMe SSD, 8GB, 16GB அல்லது 32GB RAM ஆகியவற்றுடன் கிடைக்கிறது.
இதில் கொடுக்கப்பட்டுள்ள 16:10 WUXGA (1920x1200) டிஸ்ப்ளே, 165Hz refresh rate, 300-nit brightness ஆகியவை கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
இதன் ஆரம்ப விலை 1,299 டொலர் (AMD) மற்றும் 1,349 டொலர் (Intel) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டு வெளியான Alienware 16 Aurora ($1,690) மாடலை விட குறைந்த விலையாகும்.
Alienware நிறுவனம், எங்கு முதலீடு செய்ய வேண்டும், எங்கு செலவை குறைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த மாடலை உருவாக்கியதாக தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan