மளிகை உரிமையாளர் — கடத்தலுக்காக நீதிமன்றத்தில்!
15 வைகாசி 2026 வெள்ளி 11:06 | பார்வைகள் : 242
Roubaix நகரில் உள்ள ஒருசிறு மளிகைக்கடையின் 25 வயது பெண் உரிமையாளர்,
சிரிப்பு மற்றும் போதை வாயுவான protoxyde d’azote சட்டவிரோத விற்பனை செய்தது மற்றும் பதிவற்ற வேலை (travail dissimulé) குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை Lille நகரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றார்.
டிசம்பர் 2025‑ல் கைது — 2 மாத விசாரணைக்குப் பிறகு
இந்த பெண் 2025 டிசம்பரில் கைது செய்யப்பட்டார்
குற்றச்சாட்டுகள் :
→ protoxyde d’azote கடத்தல்
→பதிவற்ற வேலை
அருகாமை மக்களின் புகார்கள்
→ கடையின் அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில்
பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுவதாக தகவல்கள்
இதனால் விசாரணைகள் ஆரம்பமாகியது.
“காணொளி. கண்காணிப்பு மற்றும் நேரடி கண்காணிப்புகள் ஒரே மாதிரியான கடத்தல் முறையை வெளிப்படுத்தின.”
என விசாரணைகள் உறுதிப்படுத்தின
கடத்தல் முறை - கடையில் தொடர்பு → வாகனத்தில் காத்திருப்பு → ரகசிய விற்பனை என, விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் முதலில் கடைக்குள் செல்வார்கள். பின்னர் தங்கள் வாகனத்திற்குத் திரும்புவார்கள்.
அருகிலுள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து ஒருவர்,
→ பெரிய பொருளை மறைத்து கொண்டு வந்து ஒப்படைப்பார்
→ வாகனத் தரிப்பிடத்தில் பணம் பரிமாற்றம் ரகசியமாக நடக்கும்
சில வாடிக்கையாளர்கள் இப்பொருளை உடனடியாக மூச்சில் இழுத்து பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டது
விசாரணையாளர்கள் தகவல்களின்படி,
982 சந்தேகமான விநியோகங்கள் — 10 மாதங்களில் 300,000 யூரோ வருமானம்
26 ஒக்டோபர் முதல் 5 டிசம்பர் 2025 வரை
→ 982 பெட்டிகள் protoxyde d’azote வந்துள்ளது.
வங்கி கணக்குகள் :
→ 10 மாதங்களில் 300,000 யூரோ வருமானம்
→ இது அறிவிக்கப்படாத சட்டவிரோத பொருளாதார செயல்பாடு
→ அதனால் பதிவற்ற மறைவேலை உறுதி செய்யப்படுகிறது
காவற்துறை சோதனையில் :
214 protoxyde d’azote போத்தல்கள் (1 லிட்டர்)
18 போத்தல்கள் (3 லிட்டர்)
5,000 பலூன்கள்
கண்டுபிடிக்கப்பட்டன.
தடுப்புக் காவல் விசாரணையில், protoxyde d’azote விற்பனை முறையை, உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.இந்த சட்டவிரோத விற்பனையிலிருந்து, வருமானம் பெற்றதைவும் ஒப்புக்கொண்டார்.
பதிவற்ற மறைவேலை குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொண்டார்
Protoxyde d’azote — இளைஞர்களில் அதிக பயன்பாடு காரணமாக சுகாதாரப் பிரச்சினை
கடந்த சில ஆண்டுகளில் :
protoxyde d’azote
→ இளைஞர்களிடையே அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால்
→ ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது
அரசு இதன் பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பு பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan