Paristamil Navigation Paristamil advert login

2026 ஓய்வூதியம்- காலாண்டை உறுதிப்படுத்த தேவையான குறைந்தபட்ச சம்பளம்!!

2026 ஓய்வூதியம்-  காலாண்டை உறுதிப்படுத்த தேவையான குறைந்தபட்ச சம்பளம்!!

15 வைகாசி 2026 வெள்ளி 10:29 | பார்வைகள் : 273


2026 ஜனவரி 1 முதல் சட்டப்படியான பிரான்சின் அடிப்படைச்  சம்பளம் Smic (salaire minimum interprofessionnel de croissance) உயர்த்தப்பட்டதால்,

இந்த ஆண்டு ஓய்வூதிய காலாண்டுகளை உறுதிப்படுத்த தேவையான குறைந்தபட்ச வருமானமும் உயர்ந்துள்ளது.

இது குறிப்பாக மாணவர்கள், பகுதி நேர ஊழியர்கள், ஒழுங்கற்ற வருமானம் பெறுபவர்கள் ஆகியோருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.

2026‑ல்

ஒரு காலாண்டை (trimestre) உறுதிப்படுத்த  
→ 1.803 யூரோ மொத்த (brut) சம்பளம் தேவை

இது கடந்த ஆண்டைவிட அதிகம்

ஒரு காலாண்டு உறுதிப்படுத்தப்படுவது வேலை நேரத்தைப் பொறுத்தது அல்ல,சம்பளத்தைப் பொறுத்தது.

ஒரு காலாண்டு = SMIC மணிநேரத்தின் 150 மணி நேர சம்பளம்.

2026 ஜனவரி 1 முதல் :

SMIC : 1.823,03 யூரோ / மாதம்

மணிநேர SMIC : 12,02 யூரோ

அதனால் :

12,02 € × 150 மணி = 1.803 யூரோ

2025‑ல் இது 1.782 யூரோ மட்டுமே

ஒரு ஆண்டில் அதிகபட்சம் 4 காலாண்டுகள் மட்டுமே, வருமானம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும்

ஒரு ஆண்டில் 4 காலாண்டுகள் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்

அதனால் :

2026‑ல் 4 காலாண்டுகளுக்கான குறைந்தபட்ச வருமானம் → 7.212 யூரோ

2025‑ல் இது 7.128 யூரோ


இந்த உயர்வு யாருக்கு இது சிரமம்?

முழுநேர ஊழியர்களுக்கு பெரிய தாக்கம் இல்லை

ஆனால் :
→ பகுதி நேர ஊழியர்கள்  
→ வார இறுதி / விடுமுறைகளில் மட்டும் வேலை செய்யும் மாணவர்கள்  
→ ஒழுங்கற்ற வருமானம் பெறுபவர்கள்  
ஆகியோருக்கு காலாண்டுகளை உறுதிப்படுத்துவது கடினமாகலாம்

முழு ஓய்வூதியத்திற்கு தேவையான காலாண்டுகள்

2023 ஓய்வூதியச் சீர்திருத்தத்தின்படி :

முழு ஓய்வூதியத்திற்கு -  172 காலாண்டுகள் தேவை

ஆனால் சீர்திருத்தம் 2027 இறுதி வரை நிறுத்தப்பட்டுள்ளதால்,

இந்த அளவு தற்காலிகமாக உறைந்துள்ளது