பிரான்சில் பணவீக்கம் உயர்வு – Livret A வட்டி விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்க வாய்ப்பு!!
15 வைகாசி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 215
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் விளைவாக எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில், பிரான்சில் ஏப்ரல் மாத பணவீக்கம் வருட அடிப்படையில் 2.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கமாக, தற்போது 1.5% ஆக உள்ள Livret A சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 1.8% வரை உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த மாற்றம் சேமிப்பாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், சமூக வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சுமையாக அமையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Livret A வட்டி விகிதம் ஆண்டுக்கு இருமுறை, பெப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திருத்தப்படுகிறது. இதற்கான கணக்கீடு யூரோ மண்டலத்தின் குறுகிய கால வட்டி விகிதமான €STR அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
ஜனவரியில் 0.25% ஆக இருந்த பணவீக்கம், பெப்ரவரியில் 0.88%, மார்சில் 1.67% மற்றும் ஏப்ரலில் 2.15% ஆக உயர்ந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரித்தால், Livret A வட்டி 1.9% வரை கூட உயர வாய்ப்பு இருப்பதாக IESEG School of Management பொருளாதார ஆய்வு இயக்குநர் Éric Dor தெரிவித்துள்ளார்.
எனினும், இறுதி முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பிரான்ஸ் மத்திய வங்கி ஜூலை மாதத்தில் அரசாங்கத்திற்கு பரிந்துரை வழங்கவுள்ளது. “சாதாரணமற்ற சூழ்நிலைகள்” இருப்பதாக கருதப்பட்டால், வழக்கமான கணக்கீட்டு முறையிலிருந்து விலகியும் அரசு முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது. சில அதிகாரிகள் தற்போதைய வட்டியை மாற்றாமல் வைத்திருக்கலாம் என்றாலும், தொடர்ந்து உயரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு Livret A மற்றும் LDDS வட்டியை 2% வரை உயர்த்தும் வாய்ப்பே அதிகம் என Éric Dor மதிப்பிட்டுள்ளார். அதேவேளை, மக்கள் சேமிப்பு திட்டமான LEP-இன் வட்டி தற்போது 2.5% ஆகவே தொடரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan