கேரளாவின் முதல்வர் ஆகிறார் சதீசன்!
15 வைகாசி 2026 வெள்ளி 03:30 | பார்வைகள் : 141
கேரளாவின் அடுத்த முதல்வராக, கட்சியின் மூத்த தலைவர் சதீசனை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. இதன் மூலம், முதல்வரை தேர்ந்தெடுப்பதில் கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த குஸ்தி, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
கேரள சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 102 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியை பிடித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி படுதோல்வியை சந்தித்து, ஆட்சியை இழந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான உடன், பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதே சமயம், காங்., கூட் டணி சார்பில் முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. காங்., மூத்த தலைவர்களான வேணுகோபால், சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியதால், கடந்த 10 நாட்களாக முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்., பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் கேரள எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தீவிரமாக நடத்திய ஆலோசனைகளுக்கு பின், சதீசனின் பெயர் இறுதி செய்யப்பட்டது .
காங்., மேலிடத்தின் முடிவை, டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில காங்., கமிட்டி பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஒருமனதாக ஏற்கணும்:
நேற்று இது குறித்து, தீபா தாஸ்முன்ஷி கூறியதாவது:
திருவனந்தபுரத்தில் கடந்த 7ம் தேதி காங்., சட்டசபை எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நடந்தது. அப்போது, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அங்கீகரித்த நபரையே, கேரள சட்டசபையின் புதிய தலைவராக ஒருமனதாக ஏற்க வேண்டும் என்ற முடிவை எம்.எல்.ஏ.,க்கள் எடுத்தனர்.
ஜனநாயக முறைப்படி அனைவரிடமும் கருத்து கேட்ட பின், காங்., சட்டசபை குழுவின் புதிய தலைவராக சதீசனை, மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தாஸ்முன்ஷி கேரளா சென்றடைந்ததும், காங்., - எம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னரை சந்தித்து சதீசன் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். அதன் பின் நடக்கும் பதவியேற்பு விழாவில், காங்., மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரவூர் தொகுதியில் இருந்து ஆறாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வான சதீசன், கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, இடதுசாரி அரசுக்கு எதிராக திறம்பட செயல்பட்டவர்.
'கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்'
கேரள முதல்வர் போட்டியில் முன்னணியில் இருந்த காங்., பொதுச்செயலர் வேணுகோபால், கட்சியின் முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சி தான் எனக்கு எல்லாமே. எனவே, கட்சியின் முடிவே இறுதியானது. கட்சி முடிவை முழுமனதுடன் வரவேற்கிறேன். சதீசன் தலைமையிலான காங்., அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றும். நாங்கள் அனைவரும் அரசுக்கு உறுதுணையாக இருப்போம்,'' என்றார். சட்டசபை தேர்தலில் வேணுகோபால் போட்டியிடவில்லை என்றாலும், முதல்வருக்கான போட்டியில் வலுவான தலைவராக இடம் பெற்றிருந்தார்.
டீம் ஓர்க்
கேரள முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சதீசன் கூறியதாவது: இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றியல்ல; லட்சக்கணக்கான காங்., தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் கூட்டு முயற்சி காரணமாகவே இந்த வெற்றி சாத்தியமானது. வேணுகோபால் தேர்தல் பணிகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனையை பெற்று, ஒரு குழுவாக செயல்பட்டு புதிய கேரளாவை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan