Paristamil Navigation Paristamil advert login

ஹொண்டா வைரஸ் - பிரான்சில் FFP2 முகக்கவச விற்பனை திடீர் உயர்வு

ஹொண்டா வைரஸ் - பிரான்சில் FFP2 முகக்கவச விற்பனை திடீர் உயர்வு

14 வைகாசி 2026 வியாழன் 21:40 | பார்வைகள் : 280


அரசு நிலைமை கவலைக்குரியது அல்ல என்று கூறினாலும்,பிரெஞ்சு மக்கள் முன்னெச்சரிக்கையாக FFP2 முகக்கவசங்களை அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர்.

தகவலின்படி,

→ 3 நாட்களில் 15,000 பெட்டிகள் விற்றுள்ளன
→ வழக்கமான வார விற்பனை : 2,400 பெட்டிகள்  
→ விலை 5 யூரோ → 7 யூரோ ஆக உயர்ந்துள்ளது

ஹொண்டா வைரஸ் தொடர்பு கொண்ட 26 நபர்களும் எதிர்மறை எனத் தேர்வாகியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு,வாரத்தில் 3 முறை பரிசோதிக்கப்படுவார்கள்.

இந்த 26 பேரில் ,
→ 8 பேர் Sainte‑Hélène → Johannesburg விமானத்தில்
→ 14 பேர் Johannesburg → Amsterdam விமானத்தில்
→ ஹொண்டா வைரஸ் கொண்டிருந்த நெதர்லாந்து பயணியுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

Hondius கப்பலில் இருந்த 5 பேர் பாரிஸ் Bichat மருத்துவமனையில் உள்ளனர்.
→ 4 பேர் நலமாக உள்ளனர்  
→ ஒரு பெண் கடுமையான நிலையில் மீளுருவாக்கப் பிரிவில் உள்ளார்