Paristamil Navigation Paristamil advert login

இன்று பிரான்சில் உள்ள அனைத்து ஹொண்டா வைரஸ் தொடர்பு நபர்களும் பரிசோதனை!

இன்று பிரான்சில் உள்ள அனைத்து ஹொண்டா வைரஸ் தொடர்பு நபர்களும் பரிசோதனை!

14 வைகாசி 2026 வியாழன் 21:22 | பார்வைகள் : 305


ஹொண்டா வைரஸ் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த பிரான்சில் உள்ள அனைத்து தொடர்பு நபர்களும் ,ஒரு விதிவிலக்கும் இல்லாமல், இன்று நோய் அறிகுறியற்ற (negative) பெறுபேறுகள் கிடைத்துள்ளன என பிரான்சின் சுகாதார அமைச்சர் ஸ்தெபானி ரிஸ்த் (Stéphanie RIST)தெரிவித்துள்ளார்.

30–40% உயிரிழப்பு விகிதம் + 42 நாள் நோய் அறிகுறிகள் தோன்றும் காலம்  — அதனால் மருத்துவ தனிமைப்படுத்தல் அவசியம்

ஹொண்டா வைரஸ் :

உயிரிழப்பு விகிதம் : 30% முதல் 40% வரை

நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி (période d'incubation) : 42 நாட்கள் (தற்போதைய மதிப்பீடு)

இந்த காரணங்களால் :

26 ஹொண்டா வைரஸ் தொடர்பு நபர்களும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இதன் விளைவாக :

Santé Publique France, INSERM மற்றும் ANRS MIE ஒருங்கிணைக்கும், அறிவியல் பணிகளின் தற்போதைய நிலைபடி,முன்னதாக வேறு யாரும் தொற்றடைந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

வாரத்தில் 3 முறை பரிசோதனை — இனிமேல் முடிவுகள் பொதுவாக வெளியிடப்படாது

இந்த 26 நபர்களுக்கு, வாரத்தில் 3 முறை மருத்துவ பரிசோதனை தொடரும்

இனிமேல் சுகாதார அதிகாரிகள்

→ பரிசோதனை முடிவுகளை வெளியிடமாட்டார்கள்  
→ ஒரு நேர்மறை (positive) முடிவு வந்தால் மட்டும் அறிவிப்பார்கள்.

மருத்துவ மற்றும் அறிவியல் பணியாளர்களுக்கு நன்றி என அறிக்கையின் முடிவில், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் :

இன்னும் அவசரசிகிச்சைப்ப் பிரிவில் (réanimation) உள்ள நோயாளியை கவனிக்கும், மருத்துவ குழுவிற்கும்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 26 நபர்களை கவனிக்கும் ,அனைத்து மருத்துவ மற்றும் அறிவியல் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.