Paristamil Navigation Paristamil advert login

Nice நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு - நால்வர் கைது!

Nice நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு - நால்வர் கைது!

14 வைகாசி 2026 வியாழன் 21:04 | பார்வைகள் : 225


Nice நகரின் Moulins பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்த  துப்பாக்கிச்சூடு நடந்தது மூன்று நாட்களுக்கு பிறகு, நால்வர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று Marseille வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு : முக்கிய சந்தேகநபர் மற்றும் மூன்று கூட்டாளிகள் கைது

துப்பாக்கிச்சூடு 11 மே திங்கட்கிழமை,

Moulins பகுதியின் Place des Amaryllis பகுதியில் நடந்தது.

காவலில் வைக்கப்பட்ட நால்வரில் :

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்

அவரது மூன்று கூட்டாளிகள்

உள்ளனர் என்று Nice நகரபிதா Éric Ciotti X தளத்தில் அறிவித்தார்.

அவர் மேலும்,

“குடியரசை சவாலுக்கு உட்படுத்தி பயமும் மரணமும் விதைக்கும், இந்த குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.”

“போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போர், தைரியம், வளங்கள் மற்றும் வலிமையைத் தேவைப்படும்.”

துப்பாக்கிச் சூடு  சுழற்றிச் சுடப்பட்டது — 17 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Nice வழக்கறிஞர் Damien Martinelli,

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்
→ ஒரு வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டார்  
→ பின்னர் த்ரோத்திநெத்தில்(trottinette) வந்து
→ கண்டபடி சுழற்றிச் சுட்டார்
→ மீண்டும் த்ரோத்திநெத்தில் தப்பினார்.
→ அவரை மீண்டும் ஏற்றிச் சென்ற வாகனம் ஓடி மறைந்தது
எனத் தெரிவித்தார்.

விபத்தில் 

2 பேர் உயிரிழந்தனர் (வயது 38 மற்றும் 57)

6 பேர் காயமடைந்தனர், அவைரிற்கும்   துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயம்

உயிரிழந்த இருவருக்கும்
→ போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பின்னணி இல்லை

ஆனால் காயமடைந்தவர்களில் :

3 பேர்  உயிராபத்தான நிலையில் உள்ளனர்

இவர்களில் 3 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் காவற்துறையினர்க்கு அறிமுகமானவர்கள்

துப்பாக்கிச் சூடு நடந்தபோது 

பாதிக்கப்பட்டவர்கள்
→ ஒரு அருந்தகத்தின்  வெளிப்புற மேசையில் அமர்ந்திருந்தனர்
→ அருகில் மிட்டாய் கடை இருந்தது

மொத்தம் 17 தோட்டாக்கள் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.


இந்த சம்பவம் 

Nice நகரின் Moulins பகுதியில்
→ போதைப்பொருள்கடத்தல் தொடர்பான வன்முறை
→ பொதுமக்கள் பாதுகாப்பு பிரச்சினைகள்
ஆகியவற்றை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

நால்வர் தற்போது காவலில் உள்ளனர்,விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது