தோல்விக்கான காரணங்களை நேரிடையாகவே கூறலாம்! ஸ்டாலின்
15 வைகாசி 2026 வெள்ளி 07:39 | பார்வைகள் : 149
சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய உடன்பிறப்பின் குரல் என்ற இணையதளத்தை திமுக தொடஙகி உள்ளது. இனி திமுகவினர் என்ன செய்ய வேண்டும் என்பதை வீடியோ மூலமாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு உங்களிடம் வீடியோவில் பேசுகிறேன். கடைசியாக தொகுதி மறுசீரமைப்பின் போது நான் பேசியிருந்தேன். அதை தொடர்ந்து தேர்தல்கள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ரிசல்ட்டும் வந்தது.
ரிசல்ட் வந்த பின்னர் என்னவெல்லாம் நடந்தது என்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். 2 வாரங்களாக எல்லார் வீடுகளிலும் செய்தி தொலைக்காட்சிகள் தான் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தளவுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போகிறது.
2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் திமுக ஒரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இது நிச்சயமாக நாம் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை. இதற்கு அவர் காரணம், இவர் காரணம் என்று யாரும், யார் மீதும் பழிபோடாதீர்கள். தலைவராக இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
வெற்றி கிடைக்கும் போது எனக்கு தான் அந்த கிரெடிட் வந்து சேருகிறது. அப்போ தோல்வி அடையும் போதும் அந்த பழியை நான் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம்.
சரி... தோற்றுவிட்டோம். அதனையே நினைத்து முடங்கிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டு வருவேன். நாம் எல்லாரும் அப்படித்தான் வர வேண்டும். அதற்கு உங்களின் ஆலோசனைகள்,பரிந்துரைகள், யோசனைகள் எனக்கு வேண்டும்.
தேர்தலாக இருந்தாலும், கரெக்ஷனாக இருந்தாலும் உங்களிடம் தான் வந்தாக வேண்டும். மக்கள் தான் எல்லாம். இந்த தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம். திமுக இன்னமும் எப்படி எல்லாம் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்களின் கருத்துகளை ஓப்பனாக சொல்லுங்கள் அதற்காக தான் உடன்பிறப்பின் குரல் என்ற இந்த வெப்சைட்.
இதில் உங்களின் கருத்துகளை பதிவிடுவது வெறும் எளிமையானது. உங்கள் குரலிலே பேசி கருத்துகளை சொன்னீர்கள் என்றால் அதுவே டைப் ஆகிவிடும். நேரிடையாக நீங்களே டைப் பண்ணியும் சொல்லலாம்.
இல்லை என்றால் நீங்கள் பேப்பரில் எழுதி, அந்த போட்டோவை அப்லோட் செய்யலாம். டாகுமெண்டாக அனுப்பலாம். உங்களின் கருத்துகள் எனக்கு வந்து சேர்ந்துவிடும். அதை எல்லாம் படித்து, பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கையை வடிவமைக்க போகிறேன்.
நமது அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு என எல்லாவற்றையும் மாற்றியாக வேண்டும். காலத்திற்கு ஏற்றபடி எவால்ப் ஆகித்தான் ஆக வேண்டும். கருத்துகளின் அடிப்படையில் திமுக 2.0 வரும். கட்சியின் அனைத்து நிலைகளிலும் தேவையான மாற்றங்களை செய்யப்போகிறேன். இதனால் அடுத்த 100 ஆண்டுகளுக்கும் இந்த இய்ககம் உயிர்ப்போடு இயங்கும்.உங்களுக்காக இயங்கும்... உடன்பிறப்பே, நீங்கள் சொல்லுங்கள் , நான் கேட்கிறேன்.
இவ்வாறு அந்த வீடியோவில் ஸ்டாலின் கூறினார்.
திமுக வெளியிட்டுள்ள இந்த உடன்பிறப்பின் குரல் என்ற இணையதளத்தில் கட்சி தொண்டர்கள் மட்டும் அல்லாது யார் வேண்டுமானாலும் தங்களின் கருத்துகளை பதிவிடலாம். அதில் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தால் உங்களுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண் மூலம் கருத்துகளை வெளியிடலாம். யார் என்பதை அடையாளம் காட்டாமல் திமுக அனுதாபியாகவோ, திமுகவின் மீது ஈர்ப்பு கொண்டவர்களாக இருந்தால் குரல் வழியாக கருத்துகளை கூறலாம். அதிகபட்சம் 2 நிமிடங்கள் வரை குரலை பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan