Paristamil Navigation Paristamil advert login

ரூ.7.44 லட்சத்திற்கு புதிய Honda NX500 E-Clutch இந்தியாவில் அறிமுகம்

ரூ.7.44 லட்சத்திற்கு புதிய Honda NX500 E-Clutch இந்தியாவில் அறிமுகம்

14 வைகாசி 2026 வியாழன் 14:41 | பார்வைகள் : 133


Honda நிறுவனம், 2026 Honda NX500 E-Clutch பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை ரூ.7.44 லட்சம் (ex-showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் Honda-வின் புதிய E-Clutch தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரைடர்கள் கியர் மாற்றும்போது கிளட்ச் லிவரை இயக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிஸ்டம் தானாகவே கிளட்ச் செயல்பாட்டை நிர்வகிக்கும். ஆனால், ரைடர்கள் விரும்பினால் வழக்கமான கிளட்ச் லிவரை பயன்படுத்தவும் முடியும்.

NX500 E-Clutch, 471cc லிக்விட்-கூல்டு பாரலல்-ட்வின் என்ஜினுடன் வருகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முக்கிய அம்சங்களில் 5-inch TFT டிஸ்ப்ளே Honda RoadSync கனெக்டிவிட்டி, நவிகேஷன், கால் & மியூசிக் கன்ட்ரோல், Honda Selectable Torque Control (HSTC), LED லைட்டிங், Showa USD ஃபோர்க், பிரீலோட் அட்ஜஸ்டபிள் ரியர் மோனோஷாக் ஆகியவை அடங்கும்.

பைக்கின் எடை 199 கிலோ. E-Clutch தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டதால், முந்தைய மாடலை விட 3 கிலோ அதிகமாக உள்ளது. விலை, பழைய கிளட்ச் மாடலை விட ரூ.1.11 லட்சம் அதிகம்.

NX500-க்கு போட்டியாக BMW F 450 GS (ரூ.5.30 லட்சம்) மற்றும் Kawasaki Versys 650 (ரூ.8.63 லட்சம்) ஆகியவை உள்ளன. Honda NX500, Matte Gunpowder Black Metallic மற்றும் Pearl Horizon White நிறங்களில் கிடைக்கிறது.

இந்த பைக், நீண்ட தூர டூரிங் மற்றும் சிட்டி டிராஃபிக் பயணங்களில் சோர்வை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Honda BigWing டீலர்ஷிப்களில் தற்போது முன்பதிவு செய்யலாம்.