Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவும் வீதிச் சறுக்கல்களும் - எச்சரிக்கை!

பனிப்பொழிவும் வீதிச் சறுக்கல்களும் - எச்சரிக்கை!

13 வைகாசி 2026 புதன் 23:02 | பார்வைகள் : 384


வெயில்கால வெப்பநிலை குறைந்து, குளிர்காலத்தைக் போன்ற வானிலை திரும்பியுள்ள நிலையில், 14 மே வியாழக்கிழமை, 5 மாவட்டங்கள், பனிப்பொழிவும் வீதிச் சறுக்கல்களும்  (neige‑verglas) காரணமாக மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

அல்ப்ஸ் அருகே உள்ள 5 மாவட்டங்கள் பாதிப்பு

இந்த வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையில் உள்ள மாவட்டங்கள் :

Haute‑Savoie

Savoie

Isère  
→ காலை 6 மணி முதல்

Hautes‑Alpes  
→ 10 மணி முதல்

Alpes‑de‑Haute‑Provence  
→ 12 மணி முதல்

இந்த பகுதிகளில் Ascension வார இறுதி , கிட்டத்தட்ட துருவ குளிர் நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மழை, பலத்த குளிர் — Météo‑France எச்சரிக்கை

Météo‑France முன்னறிவிப்பு :

நாடு முழுவதும் , மழை, குளிர் அதிகரிக்கும்

உயரமான பகுதிகளில் மிக குளிரான காற்று வீசும்.

மலைப்பகுதிகளில் 1,200 மீட்டர் உயரத்திலிருந்தே பனி வீசும்.

வெப்பநிலை : Val Thorens இல் -2°C

மதியத்திலும் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும் :

Val Thorens : -2°C (பனி பெய்யும்)

Avoriaz : -1°C

Bourg‑Saint‑Maurice : 9°C

Gap : 12°C

Météo‑France எச்சரிக்கை :

சாலைகளை பயணிக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும். விபத்து அபாயம் அதிகரிக்கும்

குறிப்பாக பனிக்கட்டி அல்லது பனி படிந்த தரையில், பாதசாரிகளும் விழுதல் / வழுக்குதல் அபாயத்திற்கு அதிகமாக உள்ளனர்.