AA23 படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடி அவரா?
13 வைகாசி 2026 புதன் 15:46 | பார்வைகள் : 127
ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் காரணமாக ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கவில்லை. ஒருபக்கம் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் கதையிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட கதையில் நடிக்க வேண்டும் என ரஜினி விரும்பியதும் அதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது..
எனவே லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கு நடிகர் புஷ்பா புகழ் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இது அல்லு அர்ஜூனின் 23வது திரைப்படமாகும். அல்லு அர்ஜுன் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படம் முடிந்ததும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்தில் மோனிஷா பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan