Paristamil Navigation Paristamil advert login

ஜனநாயகன் படம் தொடர்பில் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

ஜனநாயகன்  படம் தொடர்பில் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

13 வைகாசி 2026 புதன் 15:42 | பார்வைகள் : 116


விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்திற்கு தற்போது வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகவிருந்தது. ஆனால் படம் மறுத்தணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்திற்கு போனார். ஆனால் ஒரு மாதம் வழக்கு நடந்தும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை..

எனவே வழக்கை வாபஸ் பெற்றதோடு மறு தணிக்கைக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. அது நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை இந்த படத்திற்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. அதேநேரம் தற்போது விஜய் தமிழகத்தின் முதல்வராகிவிட்டதால் கண்டிப்பாக இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பக்கம் படம் வெளியாகும்போது படத்தின் டைட்டில் கார்டில் ‘முதலமைச்சர விஜய் நடிக்கும்’ ஜனநாயகன் என போடுவார்கள் என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்... சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் சட்டம்ன் அனுமதித்தால் அப்படியே போடுவோம் எனவும் சொல்லியிருந்தார்..


இந்நிலையில் தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிய விஜய் ‘முதலமைச்சர் விஜய்’ என்றெல்லாம் போட வேண்டாம். வழக்கமாக எப்படி போடுவீர்களோ அப்படியே போடுங்கள் என சொல்லிவிட்டாராம். எனவே, டைட்டில் கார்டில் தளபதி விஜய் நடிக்கும் என்றுதான் வரும் எனத்தெரிகிறது.  இது விஜய் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது..