சூர்யா முதல் த்ரிஷா வரை கருப்பு படத்தில் நடிக்க வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
13 வைகாசி 2026 புதன் 13:01 | பார்வைகள் : 122
நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள முதல் படம் கருப்பு. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இதில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவர் வில்லனாக நடித்துள்ள முதல் படம் இதுவாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யா உடன் நட்டி நட்ராஜ், மலையாள நடிகர் இந்திரன்ஸ், நடிகை சுவாசிகா, நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கருப்பு திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் அப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ச்சியாக தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இறுதியாக மே 14ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் அவர் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய முதல் படம் கருப்பு தான். இதற்காக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து படக்குழுவினர் போஸ்டரையும் வெளியிட்டனர்.
கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் ஆக நடித்திருக்கிறார். இப்படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருக்கிறார் சூர்யா. ஏனெனில் அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றி கிடைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு ரூ.45 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. தன்னுடைய கெரியரில் அவர் வாங்கிய அதிக சம்பளமாகவும் இது கருதப்படுகிறது. இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று வக்கீல் சரவணன், மற்றொன்று கடவுள் கருப்பசாமியாக நடித்துள்ளாராம்.
கருப்பு படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். அவர் ப்ரீத்தி என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் இப்படத்தை இயக்கி, அதில் வில்லனாகவும் நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜிக்கு ரூ.2 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அவர் இப்படத்தில் பேபி குமார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கருப்பு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் நடித்திருக்கிறார். அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். அதேபோல் நடிகர் நட்டி நட்ராஜுக்கு ரூ.1.5 கோடியும், மலையாள நடிகர் இந்திரன்ஸுக்கு ரூ.80 லட்சமும், நடிகை சுவாசிகாவுக்கு ரூ. 40 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற மே 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan