Paristamil Navigation Paristamil advert login

சீப்பு முதல் சோப்பு வரை! கணவன் மனைவி பகிரக்கூடாத பொருட்கள் என்ன?

சீப்பு முதல் சோப்பு வரை! கணவன் மனைவி பகிரக்கூடாத பொருட்கள் என்ன?

13 வைகாசி 2026 புதன் 12:13 | பார்வைகள் : 122


கணவன் - மனைவி கூட சில தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்து பயன்படுத்துவது சரும மற்றும் பாக்டீரியா தொற்று அபாயத்தை அதிகரிக்கலாம் என சுகாதார நிபுணர்களும், ஆய்வுகளும் எச்சரிக்கின்றன. எந்தெந்த பொருட்களை ஒருபோதும் பகிரக்கூடாது என்பதை பார்க்கலாம்

சில நேரங்களில் சோப்பு, சீப்பு போன்ற பொருட்களை கணவன் - மனைவிக்குள் பகிர்ந்துகொள்ள செய்வார்கள். இது சாதாரணமாக தெரிந்தாலும் உடல்நலம் சார்ந்த அல்லது சரும பிரச்சனைகளை உண்டாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சீப்பு
வீட்டில் அனைவரும் தலைமுடியை சீவுவதற்கு ஒரே சீப்பை பயன்படுத்துகின்றனர். இது மிகவும் தவறான பழக்கமாகும். இப்படி பயன்படுத்தும்போது பூஞ்சை மற்றும் பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவ வழிவகுக்கும். பொடுகு போன்ற சரும பிரச்சனைகளும் ஏற்படலாம். இந்தச் செயல்முறையின் மூலம் பேன் தொற்றுகளும் பரவுகின்றன.

​American academy of dermatology Association வெளியிட்ட தகவலின்படி, சீப்பு போன்ற தனிப்பட்ட பொருட்களை பகிர்வது படர்தாமரை (Ringworm) எனும் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சோப்பு
சோப்பின் மேற்பரப்பில் இறந்த செல்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒட்டிக்கொள்ள செய்கிறது. இதனை மற்றவர் பயன்படுத்தும்போது, ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு சோப்பு வாயிலாக பரவும் கிருமிகள் சரும தொற்று, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என தொற்று நோய் நிபுணர் Dr.சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

துண்டு

சில நேரங்களில் கணவன் - மனைவி ஒரே துண்டை பயன்படுத்தி குளிக்க செய்கிறார்கள். இது முற்றிலும் தவறான பழக்கமாகும். துண்டுகள் அதிக ஈரப்பதம் கொண்டவை என்பதால் பாக்டீரியாக்கள் இனப்பெருக்க ஏற்பட ஏற்ற இடமாக மாறுகிறது.

மற்றொருவரின் டவலை பயன்படுத்தும்போது அவருடைய தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை, உங்களுக்கு வரக்கூடும். சரும அரிப்பு, பாக்டீரியா போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

​2024-ல் வெளியான ஆய்வில், பயன்படுத்தப்பட்ட பாத் டவலில் 46% துண்டுகளில் 'கோலிஃபார்ம்' பாக்டீரியா, 36% துண்டுகளில் 'ஈ-கோலை' பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டவலை பகிர்ந்து பயன்படுத்துவது தொற்று அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரிம்மர், ரேசர்
இவை பிறருடன் பகிரக்கூடாத முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். ரத்தத்தின் மூலம் நோய்கள் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ஹெபடைடிஸ் சி போன்ற கடுமையான வைரஸ்கள் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், ட்ரிம்மரிலும் பாக்டீரியாக்கள் படிந்திருக்கக்கூடும். அவை எளிதாக மற்றொரு நபருக்கு பரவக்கூடும்.

CDC வழிகாட்டுதலின்படி, ரேசர் போன்ற தனிப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் பகிரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்பதிகள் சுகாதாரத்தில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

தனிப்பட்ட முடி மற்றும் சரும பராமரிப்பு பொருட்களை தனியாக வைத்துகொள்ளுங்கள்.

டவல், சீப்பு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

ரேசர், ட்ரிம்மர் ஆகியவற்றை கிருமிநாசினி செய்யாமல் பகிரக்கூடாது.

குடும்பத்தில் அனைவரும் ஒரே சோப்பு பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்கவும்
சரும தொற்று இருந்தால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

இத்துடன் சிறிய hygiene பழக்கங்கள் பின்பற்றுவது, பல்வேறு வகையான சரும மற்றும் தொற்று நோய்களை தவிர்க்க உதவும் என்று நிபுணர்களும், சுகாதார துறையினரும் கூறுகின்றனர்