Paristamil Navigation Paristamil advert login

மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோல் -ஆர்ஜென்டினா அபார வெற்றி

 மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோல் -ஆர்ஜென்டினா அபார வெற்றி

17 ஆனி 2026 புதன் 08:19 | பார்வைகள் : 209


உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் குழு J பிரிவின் தங்களது முதல் ஆட்டத்தில்  ஆர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டு 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி, தனது ஆட்டத்தின் மூலம் ஹெட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த ஆட்டம் லியோனல் மெஸ்ஸி ஆர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடும் 200 ஆவது சர்வதேச போட்டியாகும்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆர்ஜென்டினாவுக்கு 17 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தனது அபாரமான இடது கால் ஷாட் மூலம் முதல் கோல் அடித்து 1-0 என முன்னிலை தந்தார்.

பின்னர் அல்ஜீரிய தற்காப்பு அரணை உடைத்து பந்தை எளிதாக வலைக்குள் தள்ளி மெஸ்ஸி தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

ஆட்டத்தின் 76 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தனது மூன்றாவது கோலை அடித்து கால்பந்து வரலாற்றில் தனது முதல் ஹெட்ரிக்கை பதிவு செய்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றில் மொத்தம் 16 கோல்களுடன், ஜெர்மனியின் புகழ்பெற்ற வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் அதிக கோல்கள் அடித்த வரலாற்று சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக ஐந்து வெவ்வேறு கால்பந்து தொடர்களில் கோல் அடித்த இரண்டாவது ஆண் வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.