Paristamil Navigation Paristamil advert login

60 லட்சம் பீப்பாய் நைஜீரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்திய நிறுவனங்கள்

60 லட்சம் பீப்பாய் நைஜீரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த  இந்திய நிறுவனங்கள்

17 ஆனி 2026 புதன் 07:51 | பார்வைகள் : 154


ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டதால் சர்வதேச நாடுகள் பாதிப்புக்குள்ளாகின.  இதனால், இந்திய நிறுவனங்கள் பல்வேறு வழிகளில்  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.


அந்த வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்,  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கழகம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்,  கார்ப்பரேஷன் கழகம் ஆகியன  3 மாதங்களில் மட்டும் நைஜீரியாவில் இருந்து 60 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன.


நைஜீரியாவின் அக்வியூபோம் எண்ணெய் வயலில் இருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெயை அந்நாட்டை சேர்ந்த சீப்கோ(SEEPCO)  நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இந்த கச்சா எண்ணெய்  ஹார்முஸ் ஜலசந்தியை தவிர்த்துவிட்டு அட்லாண்டா வழியாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.