பிரெஞ்சு வைன் மற்றும் ஷாம்பெயினுக்கு 100% சுங்கவரி: டிரம்ப் மிரட்டல்!!
16 ஆனி 2026 செவ்வாய் 16:10 | பார்வைகள் : 303
டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் தனது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது விதித்துள்ள டிஜிட்டல் வரியை நீக்காவிட்டால், பிரெஞ்சு வைன் மற்றும் ஷாம்பெயின் மீது 100% சுங்கவரி விதிப்பதாக எச்சரித்துள்ளார். இந்த முடிவை ஏற்கனவே இம்மானுவேல் மக்ரோனிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு, எவியான் நகரில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன் பிரான்சின் மீது அழுத்தம் கொடுக்க டிரம்ப் இந்த மிரட்டலை பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
பிரான்சில் செயல்படும் பெரிய டிஜிட்டல் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி 3% இலிருந்து 6% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி, அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மக்ரோன், டிஜிட்டல் வரி என்பது ஐரோப்பிய நாடுகள் எடுத்த சட்டபூர்வமான முடிவு என்றும், அதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது என்றும் கூறினார். மேலும், நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் நிலைத்தன்மை அவசியம்; சுங்கவரிகள் யாருக்கும் பயனளிக்காது என்று மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan