Paristamil Navigation Paristamil advert login

யூடியூப்பில் 500 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று உலக சாதனை

யூடியூப்பில் 500 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று உலக சாதனை

16 ஆனி 2026 செவ்வாய் 15:37 | பார்வைகள் : 153


யூடியூப் வரலாற்றில் முதன்முறையாக 500 மில்லியன் (50 கோடி) சந்தாதாரர்களைப் பெற்று உலகின் முன்னணி யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2025 ஜூன் மாதம் 400 மில்லியன் சந்தாதாரர்களைக் கடந்த அவர், சரியாக ஓராண்டுக்குள் மேலும் 100 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த சாதனையைப் பாராட்டி, யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், மிஸ்டர் பீஸ்ட்டின் 'சிறுத்தை' லோகோ வடிவில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட '500M பிளே பட்டன்' விருதை அவருக்கு நேரில் வழங்கிக் கௌரவித்தார்.

தனது புதிய வீடியோவின் இறுதியில் இந்த விருதைப் பெற்றுக்கொண்ட ஜிம்மி, பூஜ்ஜியத்தில் தொடங்கிய தனது ஆரம்பகால யூடியூப் பயணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

உலகப் புகழ்பெற்ற மிஸ்டர் பீஸ்ட், 'பீஸ்ட் ஃபிலாந்த்ரோபி' மற்றும் 'டீம் ட்ரீஸ்' போன்ற அமைப்புகள் மூலம் உலகளவில் பல்வேறு தொண்டுப் பணிகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.