இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவு
16 ஆனி 2026 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 186
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி தீவில் சக்திவாய்ந்த 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் துயர நினைவுகள் இன்னும் சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பலு மக்களை வாட்டி வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களை மீண்டும் அச்சத்தில் தள்ளியுள்ளது.
கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் பலு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிகக் கடுமையாக உணரப்பட்டன.
கட்டிடங்கள் குலுங்கியதன் காரணமாக மக்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தில் பல கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தும், மேற்கூரைகள் சரிந்து விழுந்தும் சேதமடைந்தன.
இந்நிலையில் நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை பாதிக்கப்பட்ட பகுதிகளை கள ஆய்வு செய்து வருகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan