Paristamil Navigation Paristamil advert login

இந்திய விண்வெளித்துறை வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும்!மோடி அழைப்பு

இந்திய விண்வெளித்துறை வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும்!மோடி அழைப்பு

16 ஆனி 2026 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 157


இன்று விண்வெளித்துறையில் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் இந்தியா புதிய உயரங்களை எட்டி உள்ளது. இந்த வளர்ச்சியில் ஸ்லோவேக்கியா நிறுவனங்களும் பங்கெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஸ்லோவேக்கியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோவை சந்தித்து இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பிறகு பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:

சிறப்பான வரவேற்பு அளித்த ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் அனுபவம் வாய்ந்த தலைவர் மற்றும் இந்தியாவின் உண்மையான நண்பர். இந்தியா - ஸ்லோவேக்கியா இடையிதலான உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் அவரது நட்பும் மற்றும் அசைக்க முடியாத உறுதியும் முக்கிய பங்கு உண்டு.  அவரை சந்திக்க கிடைத்த வாய்ப்பு, வரலாற்று மிக்க தருணம். ஸ்லோவேக்கியாவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் வருவது இதுவே முதல்முறையாகும்.

நமது ஒத்துழைப்புக்கு புதிய சக்தி மற்றும் திசையை காட்டுவது குறித்து  இருவரும் விவாதித்தோம். இரு தரப்பு வர்த்தகம் மற்றும்பொருளாதார ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தி அஐடந்துள்ளது. நமது ஆற்றல் பெரியது. விருப்பம், பெரியது. ஆட்டோமொபை், ரயில்வே, அதிநவீன உற்பத்தி மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இரு நாட்டு மக்களும் பலன்பெறும் வகையில் பல முடிவுகளை எடுத்துள்ளோம்.  இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெற முக்கிய காரணமாக இருந்த ஸ்லோவேக்கியா பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது தொழில்துறையினர், ஸ்டார்ட் அப்கள், வர்த்தகர்கள் பல்பெறுவுதற்ககாக இந்த ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவோம்.

எதிர்கால ஒத்துழைப்புக்கு தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது எதிர்கால ஒத்துழைப்பில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்  இன்று கையெழுத்தாகி உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிட்டல் உள்கட்டமைப்பில் புதிய வாய்ப்புகளை திறக்கும். ஸ்லோவேகிய பல்கலையில் ஏஐ குறித்து இந்தியா இருக்கை ஒன்றை ஏற்படுத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

விண்வெளித்துறையில், இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான பெரிய வாய்ப்புகள் உள்ளது.  இன்று விண்வெளித்துறையில் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் இந்தியா புதிய உயரங்களை எட்டி உள்ளது. இந்த வளர்ச்சியில் ஸ்லோவேக்கியா நிறுவனங்களும் பங்கெடுக்க வேண்டும்.

சிவில் அணுசக்திக்கு இரு நாடுகளும் முக்கிய முன்னுரிமை அளித்து வருகிறது. ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கைக்கும்  ஒருங்கிணைப்புக்கும் ஒரு சான்றாக விளங்குகிறது.

இந்த முக்கியமான துறையில் இன்று நாம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி.

இது பாதுகாப்புத் தொழில்துறைக்கு இடையேயான கூட்டு வளர்ச்சி, கூட்டு உற்பத்தி மற்றும் ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ கூறியதாவது: பல பொதுவான விஷயங்களால் இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும்இணைக்கப்பட்டுள்ளன.  பல அற்புதமான சாதனை படைத்துள்ள  இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் பிரதமரை வரவேற்பதில் பெருமை அஐடகிறேன். அந்த நாடு, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாகவும்,  பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்கும் நோக்கத்துடன் இந்திய உள்ளது. பல்வேறு துறைகளில் படைக்கப்பட்ட சாதனைகளுக்காக இந்தியாவிற்கு எனது பாராட்டை தெரிவிக்கிறேன். டிஜிட்டல் மயமாககம் மற்றும் ஏஐ யன்பாட்டில்  இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையை சீர்திருத்தம் செய்யவும், இந்தியா உள்ளிட்ட நாடுகளை பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகவும் ஸ்லோவாக்கியா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறது.இந்தியாவில் நீண்ட கால பிரதமர் ஆக தவி வகித்த  மோடிக்கு வாழ்த்துகிறேன். இது ஒரு அரசியல் அற்புதம்.

இதுவரை கையெழுத்திட்ட  வர்த்தக ஒப்பந்தங்களில்  இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான  ஒப்பந்தம் லட்சியம் வாய்ந்தது.  இந்த ஒப்பந்தத்தை வரவேற்பது மட்டும் அல்லாமல், அதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஸ்லோவாக்கியா எடுக்கும். இவ்வாறு ராபர்ட் பிகோ கூறினார்