Paristamil Navigation Paristamil advert login

ராகுல் ஆசீர்வாதத்துடன் கழுத்தறுத்த காங்கிரஸ்; திமுக

ராகுல் ஆசீர்வாதத்துடன் கழுத்தறுத்த காங்கிரஸ்;  திமுக

16 ஆனி 2026 செவ்வாய் 07:27 | பார்வைகள் : 171


தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள் ராகுல் ஆசீர்வாதத்துடன் செய்யப்பட்டவை' என, தி.மு.க., மீண்டும் விமர்சித்துள்ளது. இது, தி.மு.க.,வின் ஆணவத்தையும், அகங்காரத்தையும் காட்டுவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில், காங்கிரஸ் மற்றும் ராகுலை விமர்சித்து, ஏற்கனவே கட்டுரை வெளியானது. மீண்டும் காங்கிரசை சீண்டி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'கடந்த 8ம் தேதி நடந்த 'இண்டி' கூட்டணி கூட்டத்தில், நான் என்ன பேசினேன் என்பதை, கடந்த 11ம் தேதி வெளியிட்டு இருக்கிறார் ராகுல். இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகள் வைத்துள்ளன.

'இண்டி கூட்டணியின் ஒற்றுமையை ஒவ்வொரு மாநிலத்திலும் கெடுத்தவரே ராகுல் தான். தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள் ராகுல் ஆசீர்வாதத்துடன் செய்யப்பட்டவை' என, கூறப்பட்டுள்ளது.  

இதற்கு பதிலடியாக, தமிழக காங்., துணை தலைவர் விஜயன் வெளியிட்ட அறிக்கையில், 'ராகுலை தொடர்ந்து கொச்சைப்படுத்தி, தரம் தாழ்த்தி எழுதுவது, தி.மு.க.,வின் ஆணவத்தையும், அகங்காரத்தையும் காட்டுகிறது.

இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ள கட்சிக்கு அமைச்சர் பதவி தந்தது, முதல்வர் விஜயின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதனால் தான், தி.மு.க.,வுடன் இருந்த கட்சிகளும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளன' என கூறியுள்ளார்.