40% பெற்றோர்கள் தங்கள் உணவைத் தியாகம் செய்து குழந்தைகளுக்கு முன்னுரிமை!!
15 ஆனி 2026 திங்கள் 13:58 | பார்வைகள் : 470
குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களில் பலர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். சமீபத்திய ஆய்வொன்றின்படி, இவர்களில் 54% பேருக்கு எப்போதும் போதுமான அளவு உணவு கிடைப்பதில்லை. மேலும், 40% பேர் தங்களது குழந்தைகள் அல்லது குடும்பத்தினர் சாப்பிடுவதற்காக தாங்களே சில நேரங்களில் உணவைத் தவிர்க்கின்றனர்.
மாத வருமானம் குறைவாக இருப்பதால், பல குடும்பங்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் சத்தான உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். வீட்டு வாடகை மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளைச் செலுத்திய பிறகு, மலிவான உணவுகளையே அதிகமாக நம்ப வேண்டிய நிலை உருவாகிறது.
பாடசாலை உணவகத்தில் வேலை செய்யும் ஒரு தாய் உட்பட பலர், சம்பள உயர்வு இல்லாததால் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக இறைச்சி போன்ற பொருட்களின் விலை அதிகரித்திருப்பது குடும்பங்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.
சமூக மளிகைக் கடைகளின் உதவியை நாடுபவர்களில் வேலை செய்பவர்களும், நிரந்தர வேலை ஒப்பந்தம் கொண்டவர்களும் அதிகரித்து வருகின்றனர். வேலை இருந்தாலும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதால், பலர் அரசின் ஆதரவு போதுமானதாக இல்லை என்று கருதுகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan