'முட்டை 65'
15 ஆனி 2026 திங்கள் 12:15 | பார்வைகள் : 180
தினம் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் நம் குழந்தைகள் பற்றி சொல்லவா வேண்டும், முட்டையை கண்டாலே ஓடிவிடுவார்கள். அவித்து, ஆம்ப்லேட், பொரியல், வறுவல் என எப்படி முட்டையை செய்துகொடுத்தாலும் சாப்பிட வைப்பது கஷ்டம்.
ஆனால் குழந்தைகளும் விரும்பி ரசித்து, ருசித்து சாப்பிடும் வகையில் முட்டையை வைத்து மொறுமொறுப்பான 65 செய்யலாமா.?
தேவையான பொருட்கள் :
முட்டை - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் தூள் - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
முட்டைகளை வேகவைத்து ஓடுகளை நீக்கி அதன் வெள்ளை கருவை மட்டும் தனியே எடுத்து சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு பௌலில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரகப் தூள், கரம் மசாலா, மைதா மாவு, சோள மாவு மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து நறுக்கி வைத்துள்ள வெள்ளை கருவை போட்டு முட்டையில் மசாலாக்கள் சேரும்படி நன்றாக கிளறி விட்டுக்கொள்ளுங்கள்.
முட்டை நன்றாக பொன்னிறமாக பொரிந்தவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றி அனைவருக்கும் சூடாக பரிமாறவும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan