Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு

 ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப்  அறிவிப்பு

15 ஆனி 2026 திங்கள் 08:30 | பார்வைகள் : 323


அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாகவும், அதன் மீதான கடற்படை முற்றுகையை உடனடியாக அகற்றுவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தச் சிறப்பான ஒப்பந்தம் இப்பகுதி முழுமைக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவரும்.

ஈரானுடன் அமைதியை ஏற்படுத்தப் பல ஜனாதிபதிகள் முயன்றுள்ளனர். ஆனால் எனக்கு முன்னால் இருந்த அனைவரும் அதில் தோல்வியடைந்தனர்.

உண்மையான அமைதியை அடையத் தங்களுக்கு உதவக்கூடிய ஒரு ஜனாதிபதியை இப்பகுதித் தலைவர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தொடர்ந்து, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக அந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்போது, எண்ணெய் விநியோகம் நடைபெறும்.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக அகற்றப்படும். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

விரிவான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் இரு தரப்பினரும் உறுதி அளித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படும் என ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.