குறை சொல்வதற்காக மட்டுமே லோக்சபாவில் பேசும் ராகுல்: நிர்மலா சீதாராமன்
15 ஆனி 2026 திங்கள் 11:34 | பார்வைகள் : 185
எல்லாவற்றையும் குறை சொல்வதற்காக மட்டுமே ஒவ்வொரு முறையும் ராகுல் லோக்சபாவில் பேசுகிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஆண்டுக்கு ஆண்டு, இந்தியா அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக மாறி வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் மீதான அரசு கவனத்தை ராகுல் கவனிக்கத் தவறுகிறார்.
எல்லாவற்றையும் குறை சொல்வதற்காக மட்டுமே ஒவ்வொரு முறையும் லோக்சபாவில் பேசுகிறார். அவர் இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார். இந்திய மக்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவது போலவும் பேசுகிறார். மேற்காசியப் போரின்போதும், பிரதமர் மோடி தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்தார்.
கச்சா எண்ணெய் அல்லது எல்பிஜி விலை மட்டுமல்ல. இந்த சவால்கள் அனைத்தும் இருந்தபோதிலும், விநியோகத்தில் எந்தத் தடையும் ஏற்படக்கூடாது என்று நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார். முன்னதாக, தூய்மை இந்தியா திட்டத்தின்படி பெங்களூருவில் நிர்மலா சீதாராமன், மாஸ் கிளினீங் நிகழ்ச்சியில் பங்கேற்று சுத்தம் செய்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan