தவெகவுக்கு நம்பி வருவோரை அரவணைக்கிறோம் என்கிறார் அமைச்சர் அருண்ராஜ்
15 ஆனி 2026 திங்கள் 07:20 | பார்வைகள் : 196
த.வெ.க.,வை நம்பி வருவோரை நாங்கள் அரவணைக்கிறோம் என அமைச்சர் அருண்ராஜ் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டார். பின்னர், அவர் கூறுகையில், “அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை அளிப்பதே, த.வெ.க., அரசின் லட்சியம்.
அதன்படி, மருத்துவமனைகளை ஆய்வு செய்து, தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரம் குறைத்து, துாய்மையான கழிவறை, மலிவு விலை கேன்டீன் என படிப்படியாக மாற்றப்படும். ஈரோட்டில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்,” என்றார்.
'அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் விஜய் 'ஷாப்பிங்' செய்கிறார்' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியது பற்றி அமைச்சர் அருண்ராஜிடம் கேட்டதற்கு, “எந்த கட்சியை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து, தான் முதல்வராக வேண்டும் என்று நினைத்தவரின் ஆசைக்கு இது சான்றாக உள்ளது. த.வெ.க.,வை நம்பி வருவோரை நாங்கள் அரவணைக்கிறோம்,'' என்று பதில் அளித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan