பிரதமர் மோடி- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சுவார்த்தை
15 ஆனி 2026 திங்கள் 06:17 | பார்வைகள் : 196
பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மேக்ரானை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். நீஸ் நகரில் நடந்த பாரத் இன்னோவேட்ஸ் நிகழ்ச்சியை மேக்ரானுடன் இணைந்து மோடி துவக்கி வைத்தார்.
இதன் பிறகு நீஸ் நகரின் பிரெஞ்ச் ரிவேரியாவில் அமைந்துள்ள பாரம்பரிய கெரிலோஸ் கட்டடத்தில் இரு தலைவர்களும் அரசு முறையில் சந்தித்து பேசினர். இந்த கட்டடம் 1900ம் ஆண்டுகளில் கிரேக்க முறைப்படி, பிரான்சை சேர்ந்த கட்டட கலைஞரான இமானுவேல் பொன்ட்ரிமோலியால் கட்டப்பட்டது ஆகும்.
இந்த சந்திப்பில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரான்ஸ் தரப்பில் மேக்ரானுடன், ஐரோப்பா மற்றும் வெளியுறவு விவகார அமைச்சர் ஜீன் நோயல் பாரோட் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan