Paristamil Navigation Paristamil advert login

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

14 ஆனி 2026 ஞாயிறு 16:09 | பார்வைகள் : 191


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜூன் மாதம் 15 ஆம் திகதி பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், பரீட்சை பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.