Paristamil Navigation Paristamil advert login

வரலாற்றில் ஒரு திருப்பம் - SFR விற்பனையில்!!

வரலாற்றில் ஒரு திருப்பம் - SFR விற்பனையில்!!

13 ஆனி 2026 சனி 21:04 | பார்வைகள் : 488


இது ஒரு மிகப் பெரிய, வரலாற்றுச் சிறப்பு மிக்க தொலைத்தொடர்பு மறுசீரமைப்பு — SFR முழுமையாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு Free, Bouygues Telecom மற்றும் Orange ஆகியோருக்கு விற்கப்படுகிறது.


SFR வாடிக்கையாளர்கள் எவ்வாறு பகிரப்படுகிறார்கள்?
 

Bouygues Telecom — மிகப்பெரிய பங்கைப் பெறுகிறது
 

Bouygues இந்த ஒப்பந்தத்தில் அதிகம் செலவழிப்பதால், அதற்கே மிகப்பெரிய பகுதி கிடைக்கிறது.

Bouygues பெறுவது :

SFR Business (நிறுவன வாடிக்கையாளர்கள் + செயல்பாடுகள்)

5.9 மில்லியன் SFR பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் (grand public)

Prixtel (MVNO) → 500,000 வாடிக்கையாளர்கள்

SFR செல்பேசி வலையமைப்பு (mobile network) அடர்த்தி குறைந்த பகுதிகள் / குரோசோன் (zones non denses / Crozon)

B2B Fixe உள்கட்டமைப்பு (infrastructures)

FTTH  அடர்த்தி கூடியபகுதிகள் (zone très dense) – SFR பங்கு


Bouygues = மிகப்பெரிய வெற்றியாளர்

Free — குறைந்த செலவு வாடிக்கையாளர்கள், ஆனால் மிக நம்பிக்கையானவர்கள் Free, குறைந்த ARPU (dépenses faibles) கொண்ட வாடிக்கையாளர்களைப் பெறுகிறது, ஆனால் இவர்கள் மிக நம்பிக்கையானவர்கள்.

Free பெறுவது :

6 மில்லியன் RED by SFR வாடிக்கையாளர்கள்

1.6 மில்லியன் SFR பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் (grand public)

400,000 சிறு குறு தொழில் நிறுவனங்கள் TPE (très petites entreprises)

Free = அதிக அளவு, குறைந்த செலவு, ஆனால் நம்பிக்கையான வாடிக்கையாளர்கள்


. Orange — மீதமுள்ள பகுதி, ஆனால் இன்னும் 4.9 மில்லியன் வாடிக்கையாளர்கள்

Orange, வரலாற்று முன்னணி என்பதால், போட்டி விதிகளால் குறைந்த பங்கை பெறுகிறது.

Orange பெறுவது :

SFR பொதுமக்கள் வாடிக்கையாளர்களின் ஒரு பகுதி

Réglo Mobile (MVNO)

Syma Mobile (MVNO)

Coriolis (MVNO)


Orange = குறைவான பங்கு, ஆனால் 4.9 மில்லியன் வாடிக்கையாளர்கள்

SFR இன் 3G / 4G / 5G அலைவரிசைகள் மூன்று நிறுவனங்களுக்கும் பகிரப்படும்.

Free ஏற்கனவே ,
→ 50 MHz கூடுதல் அலைவரிசைகள் (பல band-களில்)

எந்த சொத்துகள் மீண்டும் எடுக்கப்படவில்லை?

பின்வரும் சொத்துகள் எந்த நிறுவனமும் உடனடியாகப் பெறவில்லை :

SFR கடைகள் (boutiques)

SFR தொழில்நுட்ப சேவை

SFR வீட்டு மற்றும் செல்பேசி வலையமைப்புக்கள் (Fixed & Mobile mutualisés network) (Crozon தவிர)

இவை குறைந்தது 30 மாதங்கள் SFR SA மூலம் நிர்வகிக்கப்படும்.


பின்னர் பெரிய அளவில் பணிநீக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது

வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும்?


இது மிக முக்கியமான பகுதி.


வாடிக்கையாளர்கள் தங்களின் ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றாமல் மாற்றப்பட வேண்டும்

சட்டப்படி :

விலை

சேவை

ஒப்பந்த நிபந்தனைகள்

மாற்றப்பட்டால், வாடிக்கையாளருக்கு :

உடனடி, இலவச ரத்து உரிமை

ஒரு மாற்றமும் ஏற்பட்டால், நீங்கள் எந்த கட்டணமும் இல்லாமல் வெளியேறலாம்


வேலைவாய்ப்பில் பெரிய அபாயம்

SFR தொழிற்சங்கங்கள் ஏற்கனவே எச்சரிக்கின்றன :

“மிகப் பெரிய சமூக விளைவுகள்”

கடைகள் + தொழில்நுட்ப சேவை + ஒன்றிணைப்பு (mutualisation) முடிவடைவதால், 2027 தேர்தலுக்கு முன் இது அரசியல் கவனத்தை ஈர்க்கும்