Paristamil Navigation Paristamil advert login

நயன்தாரா மீண்டும் பேய் படத்தில்!.

 நயன்தாரா மீண்டும் பேய் படத்தில்!.

13 ஆனி 2026 சனி 16:32 | பார்வைகள் : 303


முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற ஹாரர் காமெடி திரைப்படங்களை எடுத்து சின்ன குழந்தைகளிடமும் பிரபலமானவர் ராகவா லாரன்ஸ். இப்போதும் இந்த திரைப்படங்கள் சன் டிவியில் போட்டால் அதிக டி.ஆர்.பி-யை பெறுகிறது. ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

வேறு சில படங்களிலும் ராகவா லாரன்ஸ் நடித்து வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வருகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் கூட மும்பையில் சில நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்..

இந்நிலையில்தான், காஞ்சனா 4 படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. அநேகமாக படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் இவர் வருவார் என சொல்லப்படுகிறது. பிளாஷ்பக் காட்சிகளில் வந்தால் நயன்தாராவும் இந்த படத்தில் பேயாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே மாயா படத்தில் நயன்தாரா பேயாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.