நாட்டுக்கோழி குழம்பு
13 ஆனி 2026 சனி 16:11 | பார்வைகள் : 196
பெரும்பாலான மக்கள் நாட்டுக்கோழியை சாப்பிடவே விரும்புவார்கள். அதிலும் நாட்டுக்கோழி வைத்து செய்யப்படும் குழம்பின் ருசியை சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த குழம்பை சாதம், இட்லி, தோசை என பலவற்றிற்கும் சேர்த்து சாப்பிடலாம். அதுவும் கிராமத்தில் செய்யப்படும் பாரம்பரிய முறையில் தயாரித்தால் அதன் சுவையே அலாதிதான்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது அக்மார்க் கிராமத்து பாணியில் எப்படி நாட்டுக்கோழி குழம்பு செய்வது என்று தான். வாங்க பார்க்கலாம்...
தேவைப்படும் பொருட்கள் :
நாட்டுக்கோழி - 1 கிலோ
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ½ டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையாள அளவு
செய்முறை :
மண் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் கொத்தமல்லி விதைகள், சீரகம், பூண்டு மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை போட்டு அடிபிடிக்காமல் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த அனைத்தும் நன்கு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் மண் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி அதன் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, உப்பு மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி வதக்கவும்.
அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக பிரட்டி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான கிராமத்து சுவையில் நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட ரெடி... சூடான சாதத்தில் இதை போட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan