‘ஜெயிலர் 2’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகர் யார் தெரியுமா?
13 ஆனி 2026 சனி 16:03 | பார்வைகள் : 258
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இதில் முக்கிய வேடத்தில் நடிக்கத் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாவிடம் கேட்டனர்.
அவர் மறுத்ததை அடுத்து ஷாருக்கான் நடிப்பதாகக் கூறப்பட்டது. அவர் கடைசி நேரத்தில் விலகியதை அடுத்து இப்போது ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான இந்தி படம் ‘பகவான் தாதா’. இந்தப் படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஹிருத்திக் ரோஷன்.
தற்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைகிறார் ஹ்ருத்திக் ரோஷன். அவர் தொடர்பான காட்சிகள் இந்த மாத இறுதியில் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan